கூர்மையான அரசியல் வசனங்கள்... கவனம் ஈர்க்கும் விஜய் ஆண்டனியின் ‘கோடியில் ஒருவன் ட்ரைலர்’!

கூர்மையான அரசியல் வசனங்கள்... கவனம் ஈர்க்கும் விஜய் ஆண்டனியின் ‘கோடியில் ஒருவன் ட்ரைலர்’!
கூர்மையான அரசியல் வசனங்கள்... கவனம் ஈர்க்கும் விஜய் ஆண்டனியின் ‘கோடியில் ஒருவன் ட்ரைலர்’!

விஜய் ஆண்டனியின் ‘கோடியில் ஒருவன்’ படத்தின் ட்ரைலர் வெளியாகி இருக்கிறது.

ஜீவாவின் ’டிஷ்யூம்’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார் விஜய் ஆண்டனி. ஆனால், முதலில் வெளியானது ‘சுக்ரன்’ படம்தான். அதனைத்தொடர்ந்து பல வெற்றிப் படங்களுக்கு இசையமைத்தவர், கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் ‘நான்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அதிலிருந்து, நடிப்பில் கவனம் செலுத்தி வருபவர், 14 வது படமாக ‘கோடியில் ஒருவன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில், ஆத்மிகா ஹீரோயினாக நடிக்க அறிமுக இயக்குநர் ஆனந்த கிருஷ்ணன் இயக்குகிறார். வில்லனாக கே.ஜி.எஃப் வில்லன் ’கருடன்’ ராமச்சந்திர ராஜு நடிக்கிறார். படம் இம்மாதத்தில் வெளியாகும் என்று படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது. ஆனால், இன்னும் தேதி அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில், இன்று இப்படத்தின் ட்ரைலரை சிவகார்த்திகேயன் வெளீயிட்டிருக்கிறார். ட்ரைலரில் சமூகத்தில் பின்தங்கிய மக்களின் கல்விக்காக போராடும் இளைஞராய் நடித்து விஜய் சேதுபதி கவனம் ஈர்க்கிறார். அதோடு, ‘ஆதார்கார்டு கூட லேமினேஷன் பண்ணி அழகா கொடுக்கிறாங்க. ஆனா, எங்க வாழ்க்கை தகரம் மாதிரி அரிச்சுடுச்சி?’, ’குட்டி சிங்கப்பூரா, குட்டி ஜப்பானா மாத்துறேன்னு சொல்லி நாட்டையே குட்டிசுவர மாத்திட்டீங்க... எல்லாம் ஃபிராடு பசங்க’, ’இவனுங்கள்லாம் ஜெயிச்சிட்டு வந்து இன்னாத்த புடுங்குவானுங்கன்னு தெரியுமே?’போன்ற வசனங்களும் கவனம் ஈர்ப்பதால் எதிர்பார்ப்புகள் கூடியுள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com