அண்ணாதுரை பாடல்கள் இலவசம்: விஜய் ஆண்டனி அறிவிப்பு

அண்ணாதுரை பாடல்கள் இலவசம்: விஜய் ஆண்டனி அறிவிப்பு

அண்ணாதுரை பாடல்கள் இலவசம்: விஜய் ஆண்டனி அறிவிப்பு
Published on

அண்ணாதுரை திரைப்படத்தின் பாடல்களை இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம் எனறு நடிகர் மற்றும் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

திரைப்பட பாடல்களை தரவிறக்கம் செய்துகொள்ள கட்டணம் வசூலிக்கும் காலம் இது. தனது பாடல்களுக்கான ராயல்டி உரிமை கேட்டு நீதிமன்ற வாசல் வரை இசைஞானி இளையராஜா சென்றிருக்கிறார். பலரும் தங்களின் பாடல்களை முறையாக அனுமதி பெற்று கூடவே கட்டணமும் கட்டி தரவிறக்கம் செய்ய வேண்டும் என்றே கட்டுப்பாடு விதித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் விஜய் ஆண்டனி தான் நடித்து வெளியாகவுள்ள அண்ணாதுரை படத்தின் பாடல்களை இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

விஜய் ஆண்டனி தனது அறிவிப்பில், “அண்ணாதுரை திரைப்படம் இந்த மாதம் 30ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. இப்படத்தின் பாடல்கள் வருகிற 15 ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியாக உள்ளது. படத்தின் பாடல்களை www.vijayantony.com என்ற எனது வலைதளத்தில் இலவசமாக டவுன்லோடு செய்து கொள்ளலாம்” என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com