”கேங்க் எல்லாம் பண்ணல... ஒருத்தன்தான்” வெளியானது ‘ரத்தம்’ ட்ரெய்லர்!

நடிகர் விஜய் ஆண்டனி நடித்துள்ள ‘ரத்தம்’ படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியானது.
ரத்தம் மூவி ட்ரெய்லர்
ரத்தம் மூவி ட்ரெய்லர்ட்விட்டர்

இயக்குநர் சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனி நடித்துள்ள படம், ‘ரத்தம்’. இதில் மகிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா, ரம்யா நம்பீசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கண்ணன் நாராயணன் இசையில், இன்ஃபினிடி ஃபிலிம் வென்ச்சர்ஸ் சார்பில் கமல் போரா, லலிதா தனஞ்செயன், பிரதீப், பங்கஜ் போரா, விக்ரம் குமார் ஆகியோர் படத்தைத் தயாரித்துள்ளனர். இந்த நிலையில் படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியிடப்பட்டது.

”கேங்க் எல்லாம் பண்ணல... ஒருத்தன்தான் பண்ணியிருக்கான்” என்ற வசனத்துடன் தொடங்கும் ‘ரத்தம்’ பட ட்ரெய்லரில், முழுவதும் ரத்த வாடை வீசுகிறது. தாடியுடனும், தாடியில்லாமலும் இரண்டுவித லுக்குகளில் காட்சியளிக்கிறார் விஜய் ஆண்டனி. ’ஆளப்பிறந்த கூட்டம் நாங்க... வீரத்திலும், ரோசத்திலும், மானத்திலும் வாழுறவங்க நாங்க’ என்கிற வசனம் பட்டையைக் கிளப்புகிறது. ‘நம்ம கண் முன்னாடி தெரியுறது ஒரு மிகப்பெரிய சிலந்தி வலையோட நுனிதான். அந்த சிலந்தி அல்ல. அந்த வலைக்குப் பின்னால் இருக்குறது மான்ஸ்டர். அந்த மான்ஸ்டரை உடனடியாக தடுத்து நிறுத்தணும். அவன் யாரா இருந்தாலும் எங்கே இருந்தாலும் தடுத்து நிறுத்தணும்” என இறுதியாக முடியும் வசனத்திற்குப் பிறகும் கத்தியுடன்கூடிய ரத்தம் கலந்திருக்கிறது.

இப்படம் வரும் செப்டம்பர் 28ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com