\
ஒரே நேரத்தில் 2 படங்களில் விஜய் ஆண்டனி

ஒரே நேரத்தில் 2 படங்களில் விஜய் ஆண்டனி

ஒரே நேரத்தில் 2 படங்களில் விஜய் ஆண்டனி
Published on

ஒரே நேரத்தில் 2 படங்களில் நடித்து வருகிறார் விஜய் ஆண்டனி.


’எமன்’ படத்தை அடுத்து விஜய் ஆண்டனி நடிக்கும் படம், ’அண்ணாதுரை’. சீனிவாசன் இயக்குகிறார். ராதிகா சரத்குமார் தயாரிக்கும் இந்தப் படத்தில் இரண்டு வேடங்களில் நடிக்கிறார் விஜய் ஆண்டனி. இந்தப் படத்தின் முதல் ஷெட்யூல் அமைதியாக நடந்து முடிந்துள்ளது. 
இதற்கிடையே, கிருத்திகா உதயநிதி இயக்கும் காளி படத்திலும் விஜய் ஆண்டனி நடித்துவருகிறார். இதில் பல்வேறு கெட்டப்புகளில் அவர் வருகிறார். ஆர்.கே.சுரேஷ் வில்லனாக நடிக்கிறார். 


இதுபற்றி விஜய் ஆண்டனி தரப்பில் கூறும்போது, ‘அண்ணாதுரை படத்தின் ஷூட்டிங் திருவண்ணாமலையில் நடந்து வந்தது. 30 நாட்கள் ஷூட்டிங் முடிந்துவிட்டது. காளி படத்தின் படப்பிடிப்பு 10 நாட்கள் நடந்துள்ளது. இரண்டு படங்களிலும் விஜய் ஆண்டனி வித்தியாசமான தோற்றத்தில் நடிக்கிறார்’ என்றனர். 
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com