Pongal Release
Pongal ReleaseSivakarthikeyan, Vijay

2026 பொங்கலுக்கு விஜயின் ஜனநாயகன் - SKவின் பராசக்தி! | Jana Nayagan | Parasakthi | Vijay

இதே பொங்கல் ரிலீஸ் ஆக விஜய் நடித்த `ஜனநாயகன்' படம் ஜனவரி 9 வெளியாகும் என முன்பே அறிவிக்கப்பட்டது.
Published on
Summary

நடிகர் விஜயின் கடைசி திரைப்படம் எனக் கூறப்படும் ஜனநாயகன் படமும், சிவகார்த்திகேயனின் பராசக்தி படமும் 2026 பொங்கலுக்கு ரிலீஸ் ஆக உள்ளன.

சிவகார்த்திகேயன் நடிப்பில் சுதா கொங்கரா இயக்கிவரும் படம் `பராசக்தி'. இப்படத்தில் ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா, ராணா டகுபதி, பேசில் ஜோசப் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். சிவகார்த்திகேயனின் 25வது படமாக உருவாகும் இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புகள் நடைபெற்று வருகின்றது.

முதலில் சூர்யா நடிப்பில் `புறநானூறு' என்று உருவாக்க இருந்த இப்படம், பின்பு சிவகார்த்திகேயன் கைகளுக்கு `பராசக்தி'யாக வந்து சேர்ந்தது. 1965ல் இந்தி எதிர்ப்பு சம்பந்தமாக தமிழ்நாட்டில் நடைபெற்ற நிஜ சம்பவங்களை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்படுகிறது என சொல்லப்படுகிறது. இப்படத்தின் டைட்டில் டீசரும் அதனை உறுதிப்படுத்தியது. இப்படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்து வருகிறார். இடையில் ஆகாஷ் பாஸ்கரன் சந்தித்த சட்ட சிக்கல்கள் காரணமாக இப்படத்தின் படப்பிடிப்பு நின்று போனது. இப்போது அந்த வழக்குகளில் இருந்து ஆகாஷ் வெளியே வந்துவிட்டதால், படப்பிடிப்பு இப்போது நடைபெற்று வருகிறது.

Parasakthi
ParasakthiSivakarthikeyan

சமீபத்தில் சிவகார்த்திகேயன் முருகதாஸ் கூட்டணியில் உருவான `மதராஸி' படம் வெளியானது. எனவே அடுத்த படமான `பராசக்தி' எப்போது வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 2026 பொங்கல் வெளியீடாக ஜனவரி 14 வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது டான் பிக்சர்ஸ் நிறுவனம். இப்படத்தை ரெட் ஜெயண்ட்ஸ் சார்பில் உதயநிதியின் மகன் இன்பன் உதயநிதி வெளியிடுகிறார்.

இதில் இன்னொரு கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், இதே பொங்கல் ரிலீஸ் ஆக விஜய் நடித்த `ஜனநாயகன்' படம் ஜனவரி 9 வெளியாகும் என முன்பே அறிவிக்கப்பட்டது. இப்போது இதே பொங்கலை சிவாவின் `பராசக்தி'யும் குறிவைத்துள்ளது. ஒரு பக்கம் விஜயிடம் துப்பாக்கி வாங்கினார், அடுத்த விஜய் ஆக சிவா முயற்சிக்கிறாரா என்ற கேள்விகள் வந்தது. அதற்கு அவர் இடத்தை யாரும் பிடிக்க முடியாது என சிவாவே மதராஸி மேடையில் பதில் அளித்தார்.

இன்னொரு பக்கம் விஜய் அரசியலில் இறங்கி இருக்கும் நேரம் என்பதாலும், அவரது கடைசி படம் `ஜன நாயகன்' என்பதாலும் பெரும் எதிர்பார்ப்பு உருவாக்கி உள்ளது. எனவே படம் சோலோ ரிலீஸ் ஆக வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரெட்ஜெயண்ட் வெளியிடும் `பராசக்தி' படம் விஜயின் `ஜன நாயகன்' படத்துடன் பொங்கலுக்கு வெளியாகிறது. இது தற்செயலாக நடந்ததா? இல்லை திட்டமிடப்பட்டதா என பேச்சுக்கள் எழுந்துள்ளன.

அதே சமயம் ஜன நாயகன் வெளியாகி ஐந்து நாட்கள் கழித்தே சிவகார்த்திகேயனின் பராசக்தி வெளியாகிறது. எனவே இது இரு படங்களுக்குமான போட்டி கிடையாது. இரண்டு படங்களையும் கொண்டாட, வரவேற்க ரசிகர்களுக்கு நன்றாகவே இடைவெளி இருக்கும் என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com