டூயட் பாட அமெரிக்கா போகும் விஜய்-கீர்த்தி சுரேஷ் ஜோடி

டூயட் பாட அமெரிக்கா போகும் விஜய்-கீர்த்தி சுரேஷ் ஜோடி
டூயட் பாட அமெரிக்கா போகும் விஜய்-கீர்த்தி சுரேஷ் ஜோடி

விஜய்யும், கீர்த்தி சுரேஷூம் பாடல் காட்சிகளில் நடிப்பதற்காக அமெரிக்கா செல்ல இருக்கிறார்கள். 

விஜய் நடித்து தனது 62வது படத்தின் படப்பிடிப்பில் மும்முரமாக உள்ளார். இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். ஏ.ஆ.முருகதாஸ் இயக்கும் இப்படத்தின் 80 சதவீத படப்பிடிப்புக்காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டன. கொல்கத்தா மற்றும் சென்னையில் முக்கால்வாசி படப்பிடிப்புக்கள் நடத்தப்பட்டுள்ளன. மேலும் இப்படத்திற்கான பாடல் காட்சிகளை அமெரிக்காவில் எடுக்க இயக்குநர் திட்டமிட்டிருக்கிறார். அதற்காக விரைவில் ‘தளபதி62’ படக்குழு அமெரிக்கா செல்ல இருக்கிறது. அந்தப் பகுதிகள் முடிந்தப் பிறகு விஜய் நடிக்க போகும் அரசியல் காட்சிகள் மட்டும் சென்னையில் படமாக்கப்பட உள்ளன. அடுத்த மாத இறுதிக்குள் முழு படப்பிடிப்பையும் முடிக்க இருக்கிறார் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ். அதனை அடுத்த படத்தை தீபாவளிக்கு திரையிட திட்டமிட்டு வருவதாக தகவல் கிடைத்துள்ளது.

‘தளபதி62’ படத்தில் ராதாரவி மற்றும் வரலக்ஷ்மி சரத்குமார், பழ.கருப்பையா, யோகி பாபு எனப் பலர் நடித்து வருகின்றனர். படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com