’பீஸ்ட்’: ’விஜய் 65’ படத்தலைப்பு, ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

’பீஸ்ட்’: ’விஜய் 65’ படத்தலைப்பு, ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

’பீஸ்ட்’: ’விஜய் 65’ படத்தலைப்பு, ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
Published on

’விஜய் 65’ படத்தின் தலைப்பையும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் விஜய் பிறந்தநாளையொட்டி இன்று வெளியிட்டுள்ளது படக்குழு.

’மாஸ்டர்’ வெற்றிக்குப்பிறகு நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ’விஜய் 65’ படத்தில் நடித்து வருகிறார் விஜய். பூஜா ஹெக்டே, பூவையார், யோகிபாபு உள்ளிட்டோர் நடிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது. நாளை ஜூன் 22 ஆம் தேதி விஜய்யின் 47 வது பிறந்தநாளை சிறப்பிக்கும் விதமாக இன்று மாலை 6 மணிக்கு துப்பாக்கியுடன் விஜய் ஃபிட்டான உடல்வாகுவுடன் இருக்கும் புகைப்படத்துடன் படத்தின் தலைப்பையும் வெளியிட்டிருக்கிறார்கள்.

‘பீஸ்ட்’ என்று வைக்கப்பட்டிருக்கும் தலைப்பை ‘தளபதி 65 ஃபர்ஸ்ட் லுக்குக்காக நாங்களும் பீஸ்ட் மோடில் காத்திருந்தோம்’ என்று கருத்திட்டு ட்ரெண்ட் செய்து வருகிறார்கள் ரசிகர்கள். இயக்குநர் நெல்சன் திலீப்குமாரின் பிறந்தாளும் இன்றுதான். இருவரின் பிறந்தநாளையும் சிறப்பித்துள்ளது தயாரிப்பு நிறுவனம்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com