’விஜய் 65’ படத்தை இயக்கும் நெல்சன் திலீப்குமார்! - அதிகாரபூர்வ அறிவிப்பு

’விஜய் 65’ படத்தை இயக்கும் நெல்சன் திலீப்குமார்! - அதிகாரபூர்வ அறிவிப்பு
’விஜய் 65’ படத்தை இயக்கும் நெல்சன் திலீப்குமார்! - அதிகாரபூர்வ அறிவிப்பு

’விஜய் 65’ படத்தை இயக்கும் நெல்சன் திலீப்குமார்; அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!

விஜய் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் ’தளபதி 65’ படத்தினை ’கோலமாவு கோகிலா’ படத்தின் இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்குகிறார், என்ற அதிகாரபூர்வத் தகவலை படத்தை தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது.

மாஸ்டர் படத்திற்குப் பிறகு நடிகர் விஜய் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிப்பதாக தகவல் வெளியானது. தர்பார் தோல்வியால், சன் பிக்சர்ஸ் நிறுவனம் தளபதி 65 படத்திற்கு முருகதாஸின் சம்பளத்தைக் குறைக்கச்சொல்லியதால், முருகதாஸ் அப்படத்திலிருந்து விலகிவிட்டார் என்ற தகவல் வெளியானது.  இதனால், தளபதி 65 படத்தை யார் இயக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பில் விஜய் ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்தார்கள்.

மாஸ்டர் படத்தின் படப்பிடிப்புகள் கொரோனா ஊரடங்கிற்குமுன்பே முடித்துவிட்டதால், கொரோனா ஊரடங்கிலிருந்து விஜய் கடந்த 8 மாதங்களாக வீட்டில்தான் இருந்து வருகிறார். ’தளபதி 65’ படத்தினை மகிழ் திருமேனி, கார்த்திக் சுப்புராஜ், எஸ்.ஜே சூர்யா இயக்குகிறார்கள் என்ற தகவல்கள் வெளியாகி வந்தது.

இந்நிலையில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடிக்கவிருக்கும் ‘தளபதி 65’ படத்தினை நெல்சன் திலீப்குமார் இயக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், நெல்சன் சொன்ன நகைச்சுவைக்கொண்ட கதை விஜய்க்கு பிடித்துவிட்டதாகவும் கடந்த மாதம் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், இன்று காலை சன் பிக்சர்ஸ் மாலை 5 மணிக்கு மிகப்பெரிய அறிவிப்பு வெளியாகும் என்று அறித்ததால் ட்விட்டரில் ’விஜய் 65’ ஹாஷ்டேக்கில் ட்ரெண்டிங் செய்தனர் அவரது ரசிகர்கள். தற்போது, சன் பிக்சர்ஸ் நிறுவனம் விஜய் 65 படத்தின் அறிவிப்பை அதிகாரபூர்வமாக வெளியிட்டு இருக்கிறது. இப்படத்தை நெல்சன் திலீப்  குமார் இயக்குகிறார் என்ற தகவலை வீடியோ போட்டு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டிருக்கிறது சன் பிக்சர்ஸ் நிறுவனம். அந்த வீடியோவில் கலாநிதிமாறன், விஜய், நெல்சன் திலீப் குமார் உற்சாகமுடன் வருகிறார்கள்.

We are happy to announce Thalapathy @actorvijay ’s #Thalapathy65bySunPictures directed by @nelsondilpkumar and music by @anirudhofficial #Thalapathy65 pic.twitter.com/7Gxg1uwy22
— Sun Pictures (@sunpictures) December 10, 2020

மூன்றாவது படத்திலேயே விஜய்யை இயக்கும் நெல்சன் திலீப் குமார்!

கடந்த 2018 ஆம் ஆண்டு நயன்தாரா நடிப்பில் வெளியான ‘கோலமாவு கோகிலா’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் இயக்குநர் நெல்சன் திலீப்குமார். சரண்யா பொன்வண்ணன், யோகிபாபு உள்ளிட்டோர் நடித்த இப்படம் தமிழில் வெற்றியடைந்ததோடு கன்னடத்திலும் ரீமேக் செய்யப்படுகிறது. இவர், விஜய் டிவியில் ஒளிபரப்பான பல்வேறு நிகழ்ச்சிகளின் இயக்குநராக இருந்துள்ளார். இவர்   சிவகார்த்திகேயனை வைத்து ’டாக்டர்’ படத்தை இயக்கியுள்ளார். ஏற்கனவே, இப்படத்தின் ‘செல்லம்மா’ பாடல் வைரல் ஹிட் ஆகியுள்ளது. நெல்சன் திலீப் குமார் இயக்கிய கோலமாவு கோகிலா, டாக்டர் படத்திற்கு இசையமைத்த அனிருத்தான் ’விஜய் 65’ படத்திற்கும் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com