விஜயின் 63 படப்பிடிப்பு பூஜையுடன் தொடக்கம்

விஜயின் 63 படப்பிடிப்பு பூஜையுடன் தொடக்கம்
விஜயின் 63 படப்பிடிப்பு பூஜையுடன் தொடக்கம்

விஜய் நடிக்கவுள்ள 63வது திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கியது.

‘சர்கார்’ படத்திற்குப் பிறகு அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ளார். இந்தப் படத்திற்கு இதுவரை பெயரிடப்படவில்லை. அட்லி-விஜய் இருவரும் ஏற்கெனவே ‘தெறி’, ‘மெர்சல்’ உள்ளிட்ட இரண்டு படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளனர். வசூல் ரீதியாக இரண்டு படங்களும் வெற்றியை பெற்றன.

விஜயின் 63வது திரைப்படமான இப்படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. விஜய்க்கு ஜோடியாக நடிகை நயன்தாரா ஒப்பந்தமாகி இருக்கிறார். இதன் மூலம் பெரிய இடைவெளிக்குப் பிறகு நயன்தாரா விஜய்க்கு ஜோடியாக இணைகிறார். படத்தில் விஜய், கால்பந்து பயிற்சியாளராக நடிக்கிறார் என்று தகவல் வெளியாகின. இதற்காக, கால்பந்து பயிற்சியையும் அவர் தொடங்கியதாக கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தில் கதிர், விவேக் உள்ளிட்டோர் நடிப்பதாக படக்குழு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. இதனை படத்தின் தயாரிப்பு நிறுவனமான கல்பாத்தி அகோரம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இந்தப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com