தனது கையால் க்ளாப் அடித்து படத்தின் பூஜையோடு படப்பிடிப்பையும் விஜய் தொடங்கி வைத்தார்.
‘மெர்சல்’ படத்திற்குப் பிறகு நடிகர் விஜய், புதியதாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் நடிக்கிறார். இவரது இயக்கத்தில் ஏற்கெனவே வெளியான ‘துப்பாக்கி’ அல்டிமேட் ஹிட்டை தழுவியது. விஜய்யின் சினிமா கேரியரில் இந்தப் படம் ஒரு மைல் கல்லாகவே இன்றுவரை கூறப்படுகிறது. அதனை அடுத்து ‘கத்தி’யில் நடித்தார். அந்தப் படம் பல்வேறு சர்ச்சைகளால் தமிழ் சினிமா வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு அரசியல் எதிர்ப்பை சந்தித்தது. அதன் பிறகு இந்தக் கூட்டணி எப்போது இணையும் என்று பெரிய எதிர்பார்ப்பு நிலவிய சூழலில் விஜய், இயக்குநர் அட்லி இயக்கிய ‘மெர்சல்’ படத்தில் நடித்தார். அதன் பின்பு இப்போது ‘தளபதி62’ படத்திற்கான பூஜை இன்று மிக நடைபெற்றது.
அப்போது படத்தின் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், கீர்த்தி சுரேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர். படத்தின் பூஜைக்குப் பின் நடிகர் விஜய் க்ளாப் அடித்து படப்பிடிப்பை தொடங்கி வைத்தார்.