ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகும் விஜய் 62

ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகும் விஜய் 62

ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகும் விஜய் 62
Published on

விஜய்62 படத்தை பற்றிய செய்திகள் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. 

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ளார். அந்தத் திரைப்படத்திற்கு இன்னும் தலைப்பிடப்படவில்லை. இதன் படப்பிடிப்பு ஜனவரியில் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளிவரத் துவங்கியுள்ளன. இதற்கு நடுவே முருகதாஸ் ஒரு ஹாலிவுட் படத்தினை ரீமேக் செய்ய இருப்பதாகவும் செய்திகள் வலம் வருகின்றன. ஆனால் இது குறித்து இயக்குநர் தரப்பில் இருந்து எந்த அறிவிப்பும் வழங்கப்படவிலை.

இந்நிலையில் முருகதாஸ் இயக்க உள்ள விஜய்62 படத்திற்கு இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதே போல் இப்படத்திற்கு கலை இயக்குநராக டி.சந்தானம் தேர்வாகியுள்ளார். இவர் ‘தெய்வமகன்’, ‘அனேகன்’ உட்பட பல படங்களில் பணி புரிந்தவர். ’ஆயிரத்தில் ஒருவன்’, மற்றும் ‘காவியத் தலைவன்’ படங்களுக்காக மாநில அரசின் விருதை பெற்றவர். எடிட்டராக எட்டு முறை தேசிய விருது பெற்ற ஸ்ரீகர் பிரசாத் பணி புரிய இருக்கிறார். ஒளிப்பதிவாளராக கிரிஷ் கங்காதரன் ஒப்பந்தமாகி உள்ளார். இவர் ஒப்பந்தமான செய்தி மட்டுமே படக்குழுவால் இதுவரை உறுதி செய்யப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com