அடுத்தக்கட்ட படப்பிடிப்பிற்காக ‘விஜய் 62’ படக்குழு அமெரிக்கா பயணிக்க இருப்பதாக தகவல் கசிந்து வருகிறது.
‘விஜய் 62’ படத்தின் படப்பிடிப்பு ஈசிஆர் ரோட்டிலுள்ள விஜய்க்கு சொந்தமான படப்பை பகுதியில் நடைபெற்று வந்தது. அதனை அடுத்து மற்றோரு யூனிட் கொல்கத்தாவிற்கு பயணமாகி அங்கு நடைபெற உள்ள படப்பிடிப்பிற்கான வேலைகளை கவனித்து வந்தது. இரண்டு படப்பிடிப்புகளும் ஒரே சமயத்தில் சம அளவில் நடைபெற்று வந்தன. கொல்கத்தாவில் மொத்தம் 20 நாள்கள் நடைபெற இருந்த படப்பிடிப்பு பாதியிலேயே முடிவடைந்துள்ளதாக செய்தி வந்துள்ளது. அங்கு எதிர்பார்த்த அளவுக்கு காட்சிகளை எடுக்க முடியாத சூழல் உருவாகியதாம். ஆகவே யூனிட் சென்னை திரும்பியுள்ளதாக தெரிகிறது. கொல்கத்தாவில் எடுக்க வேண்டிய காட்சிகளை காஞ்சிபுரம் ஏரியாவில் செட் அமைத்து படமாக்கி வருகிறார் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்.
இந்நிலையில் படக்குழு அடுத்த மாதம் அமெரிக்காவுக்கு பயணக்க உள்ளது. அங்கு 20 நாள்கள் தங்கி படக்குழு சில பாடல் காட்சிகளையும் மேலும் சில காட்சிகளையும் படமாக்க திட்டமிட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.