விஜய் 61 படப்பிடிப்பு நாளை தொடக்கம்

விஜய் 61 படப்பிடிப்பு நாளை தொடக்கம்

விஜய் 61 படப்பிடிப்பு நாளை தொடக்கம்
Published on

விஜய்-அட்லி மீண்டும் இணையும் விஜய் 61 படத்தின் படப்பிடிப்பு நாளை தொடங்கவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தெறி வெற்றிக்கு பின் விஜய்யுடன் மீண்டும் கைகோர்த்துள்ளார் இயக்குனர் அட்லி. விஜய் 61 என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கவுள்ளது. ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பின் 100-வது படம் இது என்பதால் மிகவும் பிரம்மாண்டமாக தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு நாளை சென்னையில் தொடங்குகிறது வடஇந்தியாவில் சில பகுதிகளிலும் அதைத் தொடர்ந்து வெளி நாடுகளிலும் படப்பிடிப்பை நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.

விஜய் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் நாயகிகளாக சமந்தா, காஜல் அகர்வால் ஆகியோர் நடிக்கின்றனர். முக்கிய கதாப்பாத்திரத்தில் ஜோதிகாவும் நடிக்கிறார். எஸ்.ஜே,சூர்யா, சத்யராஜ், சத்யன், நீண்ட இடைவெளிக்கு பின் வடிவேலு என இப்படத்தில் ஒரு நட்சத்திரப்பட்டாளமே இடம்பெறுகிறது. இப்படத்தின் திரைக்கதையை பாகுபலி இயக்குனர் ராஜமௌளியின் தந்தை விஜயேந்திர பிரசாத் எழுதியுள்ளார். அழகிய தமிழ்மகன் படத்திற்கு பிறகு விஜய் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com