\
2020-ல் அதிக ட்வீட்கள்: டாப் 10 நடிகர்களில் விஜய், சூர்யா, தனுஷ்!

2020-ல் அதிக ட்வீட்கள்: டாப் 10 நடிகர்களில் விஜய், சூர்யா, தனுஷ்!

2020-ல் அதிக ட்வீட்கள்: டாப் 10 நடிகர்களில் விஜய், சூர்யா, தனுஷ்!
Published on

ட்விட்டரில் இந்திய அளவில் 2020-ஆம் ஆண்டில் நடிகர்கள் குறித்து குவிக்கப்பட்ட ட்வீட்களின் டாப் 10 பட்டியலில் மகேஷ் பாபு, பவன் கல்யாண், விஜய் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளனர். இதனை ட்விட்டர் இந்தியா அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளது.

ட்விட்டர் இந்தியா வெளியிட்ட அந்தப் பட்டியலில், ஜுனியர் என்.டி.ஆர், சூர்யா, அல்லு அர்ஜுன், ராம் சரண், தனுஷ், மோகன் லால், சிரஞ்சீவி ஆகியோர் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளனர்.

இப்பட்டியலில் முதலிடம் பிடித்த மகேஷ் பாபுவின் ‘sarileru neekevvaru’ படம் கடந்த  ஜனவரியில் வெளியானது. இரண்டாமிடம், மூன்றாமிடம் பிடித்த பவன் கல்யாண், விஜய்யின் படங்கள் ஒன்று கூட இந்த ஆண்டு வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இருவரது நடிப்பிலும் அடுத்த ஆண்டுதான் படங்கள் வெளியாகவுள்ளன.

இந்த பத்து நடிகர்களில் 6 பேர் தெலுங்கின் முன்னணி நடிகர்கள். மூன்று பேர் தமிழ் நடிகர்கள், மலையாளத்தில் மோகன்லால் மட்டுமே இடம் பிடித்துள்ளார். இப்பட்டியலில் இடம்பிடித்த தமிழ் நடிகர்கள் விஜய், சூர்யா, தனுஷ் ஆகியோரில் சூர்யாவின் சூரரைப் போற்று படமும், தனுஷின் ‘பட்டாஸ்’ படமும் இந்த ஆண்டு வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com