பாசக்காரர்கள் ஆன அஜீத், விஜய் ரசிகர்கள்: ஆன்லைன் ஆச்சரியம்!

பாசக்காரர்கள் ஆன அஜீத், விஜய் ரசிகர்கள்: ஆன்லைன் ஆச்சரியம்!

பாசக்காரர்கள் ஆன அஜீத், விஜய் ரசிகர்கள்: ஆன்லைன் ஆச்சரியம்!
Published on

சமூக வலைத்தளங்களில், அஜீத்- விஜய் ரசிகர்களின் முட்டல், மோதல் விவகாரம் ஆன்லைனுக்கு அறிமுகமில்லாதவர்களுக்கு கூட அத்துப்படி. இவர் ரசிகர்கள், அவரை வாருவதும் அவர் ரசிகர்கள் இவரை வாருவதும் ஆன்லைன் அட்ராசிட்டியின் உச்சம். இதில்
அச்சில் ஏற்ற முடியாத அசிங்க வார்த்தைகளும் அடங்கும்.

இதுக்கெல்லாம் ’எண்டே’கிடையாதா? என எவ்ரிடே புலம்பும் சீனியர்கள் ரசிகர்கள் வருத்தத்தில் மூழ்குவார்கள். ஆனால், இவர்கள் நினைப்பது போல ’தல’யும் ’தளபதி’யும் மோதிக்கொள்வதில்லை எதற்கும். இந்த மோதலுக்கு வெளியேதான் இருக்கிறார்கள் அவர்கள். அவர்களின் நட்புக்கு
ஆயிரம் கதைகள் இருக்கிறது கோலிவுட்டில். 
இந்நிலையில், இப்படி முட்டிக்கொண்ட அஜீத், விஜய் ரசிகர்கள் இன்று திகட்ட திகட்ட அன்பை கொட்டி வருகிறார்கள் அன்லைனில். எப்படி வந்தது இந்த பாசக்கார மாற்றம்?

அஜீத்தின் நேற்றைய அறிக்கைதான் இதற்கு காரணமாம்!

‘சில தனிப்பட்ட, அங்கீகாரம் இல்லாத, சுய அதிகாரம் எடுத்துக்கொண்ட சில நிறுவனங்கள் மற்றும் தனிப்பட்ட நபர்கள் தங்களுடைய அரசியல், சமூக ரீதியான கருத்துகளை தனது கருத்தாக பிரகடனப்படுத்தி வருகின்றனர். இதற்கு தனது பெயரையும், புகைப்படத்தையும்
அனுமதி இல்லாமல், அங்கீகாரம் இல்லாமல் பயன்படுத்திக் கொள்கின்றனர்’ என்று அந்த அறிக்கையில் கூறியிருந்தார் அஜீத். 
இந்த அறிக்கையினால்தான் இரண்டு ஹீரோக்களின் ரசிகர்களின் மனம் மாறியிருக்கிறார்களாம். இதையடுத்து சமூகவலைத்தளங்களில் வைரலாகும் மீம்ஸ்களும் அதையே காட்டுகிறது.


 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com