விஜய்யின் செல்ஃபி.. தோனியின் டிவீட்..- டிவிட்டரில் அதிகம் பேசப்பட்ட இந்த வருட லிஸ்ட்!

விஜய்யின் செல்ஃபி.. தோனியின் டிவீட்..- டிவிட்டரில் அதிகம் பேசப்பட்ட இந்த வருட லிஸ்ட்!
விஜய்யின் செல்ஃபி.. தோனியின் டிவீட்..- டிவிட்டரில் அதிகம் பேசப்பட்ட இந்த வருட லிஸ்ட்!

இந்த ஆண்டு டிவிட்டரில் நடிகர் விஜய் எடுத்த செல்ஃபி அதிகம் ரீட்வீட் செய்யப்பட்ட டிவிட்டாக உள்ளது. கிரிக்கெட் வீரர் கோலி தனது மனைவி கர்ப்பமாக உள்ளதை அறிவித்த டிவீட் 6.4 லட்சம் பேரால் விரும்பப்பட்டு, அதிக லைக் வாங்கிய ட்வீட்டாக உள்ளது, அதிகம் பேசப்பட்ட படங்களில் ஒன்றாக “சூரரைப்போற்று” உள்ளது என்று டிவிட்டர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

“2020ஆம் ஆண்டு மிகவும் அசாதாரணமானது மற்றும் தனித்துவமானது. நாம் உடல் ரீதியாக தொலைதூரத்தில் இருந்ததால், நம்மை டிஜிட்டலாக இணைக்க வேண்டிய அவசியம் இருந்தது. தற்போது மக்கள் தொடர்பை வெளிப்படுத்த டிஜிட்டல் மிக முக்கியமான வழியாக மாறியுள்ளது”என்று ட்விட்டர் இந்தியாவின் நிர்வாக இயக்குனர் மனீஷ் மகேஸ்வரி கூறினார் .

இந்த ஆண்டின் டிவிட்டர் டிரெண்டிங் பற்றி பேசிய அவர் “ பிப்ரவரி மாதம் விஜய்  ரசிகர்களுடன் எடுத்துக்கொண்ட  செல்ஃபி, 2020 ஆம் ஆண்டில் அதிகமாக ரீட்வீட் செய்யப்பட்ட ட்வீட் ஆகும், அதேபோல கிரிக்கெட் வீரர் விராட் கோலி தனது  மனைவி நடிகை அனுஷ்கா ஷர்மா கர்ப்பமாக இருப்பதை அறிவித்த டிவீட் இந்த ஆண்டின் மிகவும் விரும்பப்பட்ட டிவீட் ஆகும்.

அரசியல் டிவீட்களை பொறுத்தமட்டில் பிரதமர் நரேந்திர மோடியின் இல்லத்தில் விளக்குகள் ஏற்றுவது குறித்து டிவீட்டானது அதிகமாக மறு டிவீட் செய்யப்பட்டன. அதேபோல விளையாட்டு தொடர்பான டிவீட்டில் முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன் எம்.எஸ். தோனி, திரு. மோடியின் பாராட்டு கடிதத்திற்கு நன்றியைத் தெரிவித்துக் கொண்டது டிவீட் அதிகம் விரும்பப்பட்டது. அதுபோல ஐபிஎல் 2020 மற்றும் தில் பெச்சாரா ஆகியவை சிறந்த விளையாட்டு மற்றும் திரைப்பட ஹேஷ்டேக்குகளாக இருந்தன, ‘பினோட்’ நினைவுச்சின்னம் குறித்து அதிகம் டிவீட் செய்யப்பட்டது.

நடப்பு விவகாரங்கள் பற்றிய தலைப்புகள் பட்டியலில் கோவிட்-19 முதலிடத்தில் உள்ளது,  இதைத் தொடர்ந்து மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் மற்றும் ஹத்ராஸ் கூட்டு பாலியல் வன்கொடுமை ஆகியவை அதிகம் உரையாடிய தலைப்புகளாக உள்ளது ”என்றும் அவர் கூறினார்.

உலகளவில் இந்த ஆண்டு டிவி மற்றும் திரைப்படங்களைப் பற்றி நிமிடத்திற்கு சுமார் 7,000 டிவீட்டுகள் வெளியிடப்பட்டன. இந்தியாவில் இந்தி திரைப்படமான தில் பெச்சாரா இந்த ஆண்டு அதிகம் டிவீட் செய்யப்பட்ட படமாகும், அதனையடுத்து தமிழ் திரைப்படமான சூரரைப்போற்று மற்றும் தெலுங்கு திரைப்படம் சரிலேரு நீகேவரு ஆகியவை உள்ளன எனவும் தெரிவித்தார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com