மலரும் நினைவில் செந்தில்: மகிழ்ச்சியில் விக்னேஷ் சிவன்
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம், ’தானா சேர்ந்த கூட்டம்’. கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடிக்கிறார். மற்றும் ரம்யா கிருஷ்ணன், சத்யன், நடன இயக்குனர் சிவசங்கர் உட்பட பலர் நடிக்கின்றனர். அனிருத் இசை அமைக்கும் இந்தப் படத்தின் இறுதிகட்டப் பணிகள் இப்போது நடந்துவருகிறது. இதில் காமெடி நடிகர் செந்தில் முக்கிய வேடத்தில் நடித்துவருகிறார். கவுண்டமணியுடன் நடித்தபோது நடந்த காமெடி அனுபவங்களை அவர் விக்னேஷ் சிவனிடம் பகிர்ந்து கொண்டார்.
இதுபற்றி விக்னேஷ் சிவன் கூறும்போது, ‘கடைசிகட்ட படப்பிடிப்பில் இருக்கிறோம். நடிகர் செந்திலுடன் பணியாற்றியது என் அதிர்ஷ்டம். அவருடன் பணியாற்றிய ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சியாக இருந்தது. பல காமெடி காட்சிகள் எடுக்கப்பட்டபோது நடந்த சம்பவங்களை அவர் சொன்னது சுவாரஸ்யம்’ என்றார். இந்த ஷெட்யூலை அடுத்து, ஒரு பாடல் காட்சி மட்டுமே பாக்கி இருக்கிறது. டீசர் மற்றும் பர்ஸ்ட் லுக் விரைவில் வெளியாக இருக்கிறது.