\
விக்னேஷ் சிவன் - சிவகார்த்திகேயன் படம் டிராப்?

விக்னேஷ் சிவன் - சிவகார்த்திகேயன் படம் டிராப்?

விக்னேஷ் சிவன் - சிவகார்த்திகேயன் படம் டிராப்?
Published on

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பதாக இருந்த படம், நிறுத்தப்பட்டு விட்டதாகக் கூறப்படுகிறது.

`போடா போடி', `நானும் ரௌடிதான்', `தானா சேர்ந்த கூட்டம்' படங்களை அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதை லைகா நிறுவனம் தயாரிப்பதாக அறிவித்திருந்தது. சிவகார்த்திகேயனின் 17 வது படமான இதற்கு அனிருத் இசை அமைப்பதாகவும் ஜூலை மாதம் படப்பிடிப்பு தொடங்க இருப்ப தாகவும் கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் ஆகஸ்ட் மாதம் முடிவடைந்த நிலையிலும் இந்தப் படம் தொடங்கப்படவில்லை. இதுபற்றி விசாரித்தபோது, இந்தப் படம் கைவிடப்பட்டதாகக் கூறப்பட்டது.

’2.0’ படத்துக்குப் பிறகு லைகா நிறுவனம், படங்களின் கதை மற்றும் பட்ஜெட் விவகாரங்களைக் கவனிக்கத் தனியாகக் குழு ஒன்றை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் குழு, கதைகளைக் கேட்டு அனுமதி அளித்தால் மட்டுமே படம் தயாரிக்கப்படும். அதோடு பட்ஜெட் விவகாரங்களையும் சரியாக கணக்கிட்டே முடிவெடுக்கும்.

அதன்படி விக்னேஷ் சிவன் சொன்ன கதையை இந்தக் குழு கேட்டதாகவும் அவர்கள் பிடிக்கவில்லை என்று கூறியதால் படம் கைவிடப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com