
பெண்கள் தினத்தை முன்னிட்டு தனது காதலி நயன்தாராவுக்கு இயக்குனர் விக்னேஷ் சிவன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
டிவிட்டரில் அவர் தெரிவித்துள்ள வாழ்த்துச் செய்தியில், ’அழகான போராளியே, அத்தனை வலிகள், தோல்விகளுக்கு இடையில், இந்த உயரத்தை அடைந்திருப்பதற்கு வாழ்த்துகள். மெக்சிகோவில் ஏதோ பிரச்சனை என்றால் கூட மக்கள் உங்கள் பெயரை அதில் இழுத்தாலும் புன்னகைத்துக்கொண்டே சென்றுகொண்டிருக்கிறீர்கள். வலுவாகவும் நம்பிக்கையோடும், நல்லதையே நினைப்பதுமாக...நயன்தாராவாக இருப்பது அவ்வளவு எளிதல்ல. நான் சந்தித்த பெண்களில் வலிமையான மற்றும் அழகான பெண்ணுக்கு மகளிர் தின வாழ்த்துக்கள்’ என்று கூறியுள்ளார்.