நயன்தாராவுக்காக புதிய அவதாரம் எடுத்த விக்னேஷ் சிவன்..!

நயன்தாராவுக்காக புதிய அவதாரம் எடுத்த விக்னேஷ் சிவன்..!

நயன்தாராவுக்காக புதிய அவதாரம் எடுத்த விக்னேஷ் சிவன்..!
Published on

இயக்குநர் விக்னேஷ் சிவன் பாடகராக புதிய அவதாரம் எடுத்துள்ளார்.

நடிகரும், இயக்குநருமாக விக்கேஷ் சிவனை பலருக்கும் தெரியும். அவர் நல்ல பாடலாசிரியரும் கூட. கடந்த 2015-ம் ஆண்டு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான ‘நானும் ரௌடி தான்’படத்தில் இடம்பெற்றிருந்த அனைத்து பாடல்களும் செம ஹட் ஆனது. ‘கண்ணானே கண்ணே’, ‘ தங்கமே’ உள்ளிட்ட பாடல்கள் பலரின் ரிங் டோனாக இன்றும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. அனிருத் இசையமைத்திருந்த இந்த பாடலின் ஆசிரியர் விக்னேஷ் சிவன்தான். இந்நிலையில் விக்னேஷ் சிவன் பாடலாசிரியராக மட்டுமில்லாமல் பாடகராகவும் புதிய அவதாரம் எடுத்துள்ளார்.

நெல்சன் இயக்கத்தில் நயன்தாரா, யோகிபாபு, சரண்யா உட்பட பலர் நடித்துள்ள படம், ’கோலமாவு கோகிலா’. படத்தை லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கிறது. ’கோலமாவு கோகிலா’ படத்துக்கு தணிக்கைக் குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியிருக்கிறது. இதையடுத்து அடுத்த மாதம் படத்தை ரிலீஸ் செய்ய லைகா நிறுவனம் முயற்சி செய்து வருகிறது. இந்நிலையில் இப்படத்தில் விக்னேஷ் சிவன் பாடகராக புதிய அவதாரம் எடுத்தது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள விக்னேஷ் சிவன், “ கோலமாவு கோகிலா” படத்திற்கான சிறிய சேவை என குறிப்பிட்டுள்ளார். அத்தோடு மட்டுமில்லாமல் பாடல் பாடுவதற்கு அவர் பயிற்சி எடுக்கும் வீடியோவையும் வெளியிட்டுள்ளார். பாடகராவும் விக்னேஷ் சிவன் உச்சம் தொடுவார் என நம்புவோமாக.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com