\
நயன்தாராவுக்கு விக்னேஷ் சிவன் பிறந்தநாள் வாழ்த்து

நயன்தாராவுக்கு விக்னேஷ் சிவன் பிறந்தநாள் வாழ்த்து

நயன்தாராவுக்கு விக்னேஷ் சிவன் பிறந்தநாள் வாழ்த்து
Published on: 

நயன்தாரா பிறந்தநாளுக்கு விக்னேஷ் சிவன் தனது ட்விட்டரில் வாழ்த்து கூறியுள்ளார்.

நானும் ரவுடிதான் திரைப்படத்திற்கு பின் நயன்தாராவுக்கும் இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் நெருங்கிய நட்பு ஏற்பட்டது. அதன் பின் அது காதலாக மலர்ந்தது. இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் செய்திகள் வந்து கொண்டுள்ளன. 
இந்நிலையில் இன்று நயன்தாரா பிறந்தநாள். அதற்கு தனது ட்விட்டர் பக்கத்தில் விக்னேஷ் சிவன், “ஒரு பெண்ணின் மகிழ்ச்சியான பிறந்தநாளை நான் உண்மையாக பார்க்கிறேன். தைரியம் நிலைக்கட்டும். அழகு நிலைக்கட்டும். நயன்தாராவுக்கு அற்புதமான கதை ஒன்றை உருவாக்கி வைத்திருக்கிறேன். எப்போதும் உன்னால் பெருமை கொள்கிறேன். என் அதிகப்படியான அன்புகள். என் தங்கமே உன்னை மதிக்கிறேன்.” என்று பதிவிட்டுள்ளார்.


 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com