“லோகேஷ் படத்தை பார்த்தவுடன் லைக் செய்துவிட்டேன்”- விஜய் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட விக்னேஷ் சிவன்!

விஜய் மற்றும் ரஜினி ரசிகர்களுக்கான கருத்து மோதலில் சிக்கிக்கொண்ட இயக்குநர் விக்னேஷ் சிவன், தற்போது விஜய் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.
Vignesh Shivan - Lokesh - vijay
Vignesh Shivan - Lokesh - vijayweb

விஜய் ரசிகர்களுக்கும் இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் இடையே மீண்டும் ஒரு மனக்கசப்பு ஏற்பட்டிருக்கிறது. ஏற்கனவே, ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் பிகில் படத்தில் விஜய் பேசிய உருக்கமான மோட்டிவேஷன் காட்சியை கிங்ஸ்லியை வைத்து ரி கிரியேட் செய்ததற்காக விஜய் ரசிகர்கள் அதிருப்தி அடைந்தனர். இந்த நிலையில் தான் தற்போது ரஜினி ரசிகர் ஒருவரின் பதிவை லைக் செய்து புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார் விக்னேஷ் சிவன்.

அந்த வீடியோவில் லோகேஷ் கனகராஜ் - விஜய் இடையில் சர்ச்சை இருப்பது போன்று ரஜினி ரசிகர் பேசியிருந்தார். அந்த வீடியோவை விக்னேஷ் சிவன் லைக் செய்திருப்பது, விஜய் ரசிகர்களை மீண்டும் கொந்தளிக்க வைத்துள்ளது. அந்த லைக்கை உடனே அவர் நீக்கிவிட்ட போதும், மீண்டும் அந்த ரஜினி ரசிகர் அவரை வம்பிற்கு இழுத்துவிட்டுள்ளார். விக்னேஷ் என்னுடைய பதிவை லைக் செய்துவிட்டு ஏன் நீக்கினார் என்று தெரியவில்லை என்று பதிவிட்டுள்ளார்.

leo
leo

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக இயக்குநர் விக்னேஷ் சிவன் விளக்கம் அளித்துள்ளார். அதில், “டியர் விஜய் பேன்ஸ், லோகி பேன்ஸ்.. குழப்பத்திற்கு மன்னிக்கவும். வீடியோவில் என்ன பேசப்பட்டிருக்கிறது என்பதை பார்க்காமலேயே அது லோகேஷ் கனகராஜின் நேர்காணல் என்பதால் அந்த வீடியோவை லைக் செய்தேன். ஏனெனில் நான் லோகேஷ் படங்களின் மிகப்பெரிய ரசிகன். அதேபோல், அவரது நேர்காணல்களும், அவர் பேசும் விதமும் எனக்கு பிடிக்கும்.

நானும் தளபதி விஜய் சாரின் லியோ பட ரிலீஸுக்கு தான் காத்திருக்கிறேன்!

ஏதோ உணர்ச்சி வேகத்தில் அந்த நேர்காணலில் இருந்த லோகேஷ் கனகராஜின் படத்தை பார்த்து லைக் செய்துவிட்டேன். அது என்னுடைய மோசமான தருணம், நான் வீடியோவில் என்ன பேசப்பட்டுள்ளது என்பதை பார்க்கவில்லை. ட்விட்டரில் இருந்த கருத்தையும் படிக்கவில்லை. நான் கொஞ்சம் கவனமுடன் இருந்திருக்க வேண்டும். மன்னிக்கவும்.

இது என்னுடைய தரப்பில் நடந்த சில்லியான தவறு. உலகம் முழுவதும் உள்ள தளபதி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். அக்டோபர் 19 ஆம் தேதி படத்தை காண நானும் ஆவலுடன் இருக்கிறேன். என்னுடைய இந்த தவறை பொருட்படுத்தாமல் இதற்கு மேலும் இதில் கருத்து தெரிவிக்க நேரத்தை செலவிட வேண்டாம். நானும் தளபதி விஜய் சாரின் லியோ படத்தின் மிகப்பெரிய ரிலீஸ்க்காக தான் காத்துக் கொண்டிருக்கிறேன். லியோவை கொண்டாட தொடங்குவோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த விவகாரத்திற்கான மூல காரணம் என்ன?

கடந்த சில நாட்களாகவே விஜய் மற்றும் ரஜினிகாந்த் ரசிகர்கள் ஒருவரை ஒருவர் சமூக வலைதளங்களில் கலாய்த்து வருகின்றனர். யார் சூப்பர் ஸ்டார் என்பதில் இந்த பஞ்சாயத்து தொடங்கியது. ஜெயலர் படம் வியாபார ரீதியில் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற நிலையில் ரஜினி ரசிகர்கள் தீவிரமாக சோஷியல் மீடியால் கம்பு சுற்றி வருகிறார்கள். லியோ படம் ஜெயலர் படத்தின் ரெக்கார்டை முறியடிக்குமா இல்லையா என ஒரு விவாதமே நடைபெற்று வருகிறது. இது தொடர்பான அழுத்தம் குறித்து இயக்குநர் லோகேஷ் நேர்காணல் ஒன்றில் விளக்கம் கொடுத்திருந்தார். அதாவது அந்த அழுத்தமெல்லாம் தனக்கு கிடையாது என்று கூறியிருக்கிறார். இத்தகைய சூழலில் தான் இரு ரசிகர்களுக்கு இடையிலான யுத்தத்தில் சிக்கிக் கொண்டார் விக்னேஷ் சிவன்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com