விக்னேஷ் சிவன் - பிரதீப் ரங்கநாதனின் படத்துடைய பெயருக்கு கிளம்பிய எதிர்ப்பு!

விக்னேஷ் சிவன் இயக்கும் புதிய திரைப்படத்திற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

நானும் ரவுடிதான் திரைப்படம் மூலம் தன் இயக்குநர் பயணத்தை தொடங்கிய விக்னேஷ் சிவன், அடுத்ததாக இயக்கும் திரைப்படத்திற்கு லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் என பெயரிட்டுள்ளார். இதன் சுருக்கம் எல்.ஐ.சி ஆகும். பிரதீப் ரங்கநாதன், க்ரீத்தி ஷெட்டி, எஸ்.ஜே. சூர்யா உள்ளிட்டோர் நடிக்கும் இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கி உள்ள நிலையில், எல்.ஐ.சி என்ற பெயருக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இந்த தலைப்பை சுமா பிக்சர்ஸ் சார்பாக 2015-ஆம் ஆண்டே பதிவு செய்துவிட்டதாக தெரிவித்துள்ள இயக்குநர் எஸ்.எஸ்.குமரன், விக்னேஷ் சிவனின் செயல் சிறிய தயாரிப்பாளர்களை நசுக்கும் செயல் எனக்கூறியுள்ளார்.

விக்னேஷ் சிவன் தரப்பில் இருந்து படத்தலைப்பை வழங்குமாறு தன்னை அணுகியதாகவும், தான் மறுத்துவிட்ட நிலையிலும் அதே தலைப்பை படத்திற்கு வைத்திருப்பதாகவும் எஸ்.எஸ்.குமரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

விக்னேஷ் சிவனின் செயல் அதிகாரத்தன்மை கொண்டது என்றும் இதே செயலை அவர் தொடர்ந்தால் சட்டப்படி வழக்கு தொடர இருப்பதாகவும் இயக்குநர் எஸ்.எஸ். குமரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com