தல அஜித், தளபதி விஜய் எப்படி ? சொல்கிறார் நடிகர் வித்யூத் ஜாம்வால் !

தல அஜித், தளபதி விஜய் எப்படி ? சொல்கிறார் நடிகர் வித்யூத் ஜாம்வால் !

தல அஜித், தளபதி விஜய் எப்படி ? சொல்கிறார் நடிகர் வித்யூத் ஜாம்வால் !
Published on

பாலிவுட் நடிகரான வித்யூத் ஜாம்வால் தென் இந்திய படங்களிலும் புகழ்ப்பெற்றவர். இவர் முதன்முதலில் தெலுங்கில் "சக்தி" படம் மூலம் வில்லனாக அறிமுகமானவர். இப்போது பல்வேறு மொழிகளில் வில்லன் மற்றும் குணச்சித்திர கதாப்பாத்திரங்களிலும், இந்தியில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார்.

இவர் இந்தியில் "போர்ஸ்" படம் மூலம் வில்லனாக அறிமுகமானார். ஆனால் இப்போது ஹீரோவாக நடிக்கும் அளவிற்கு உயர்ந்திருக்கிறார். வித்யூத் ஜாம்வால் தமிழில் முதல் முதலில் நடித்தப் படம் அஜித்தின் "பில்லா 2", பின்பு விஜய்க்கு வில்லனாக துப்பாக்கி மற்றும் சூர்யாவுக்கு நண்பனாக "அஞ்சான்" திரைப்படத்திலும் நடித்திருந்தார்.

அண்மையில் வித்யூத் ஜாம்வால் அளித்திருந்தப் பேட்டியில் அஜித், விஜய் மற்றும் சூர்யாவைப் பற்றி பேசியுள்ளார். அதில் "அஜித் மிகவும் அன்பானவர். விஜய் படப்பிடிப்புதளத்தில் எல்லோரும் பிரச்னையின்றி சந்தோஷகமாக இருக்கும் வகையில் பார்த்துக்கொள்வார், யாரையும் காயப்படுத்தமாட்டார். சூர்யா மனதளவிலும் உடல் அளவிலும் மிகவும் வலிமையானவர்" என குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com