ஹாலிவுட்டில் அறிமுகமாகும் விஜய் பட வில்லன்! | Vidyut Jammwal | Street Fighter
பிரபல பாலிவுட் நடிகர் வித்யுத் ஜம்வால். அஜித்தின் `பில்லா 2' மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்; விஜயின் `துப்பாக்கி' படத்தில் வில்லனாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமானார். பின்னர் சூர்யாவின் `அஞ்சான்' படத்திலும் முக்கிய பாத்திரத்தில் நடித்திருந்தார். இதன் பிறகு பாலிவுட்டில் பிஸியாக பல ஆக்ஷன் படங்களில் ஹீரோவாக நடித்துக் கொண்டிருந்த வித்யுத், மீண்டும் முருகதாஸ் இயக்கத்தில் `மதராஸி' மூலம் தமிழ் சினிமாவுக்கு திரும்பினார். இப்போது இவர் ஹாலிவுட் செல்கிறார் என்பதே லேட்டஸ்ட் அப்டேட்.
புகழ்பெற்ற வீடியோகேம் சீரிஸான Street Fighter-ன் லைவ் ஆக்ஷன் படத்தை தயாரிக்கிறது பாராமௌன்ட் பிக்சர்ஸ். Kitao Sakurai இயக்கும் இப்படத்தில் Noah Centineo, Andrew Koji, Jason Momoa, David Dastmalchian என பல ஹாலிவுட் பிரபலங்கள் நடிக்கிறார்கள். இப்படத்தில் Dhalsim என்ற கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார் வித்யுத். வீடியோ கேமில் இந்த கதாப்பாத்திரத்திற்கு பல சக்திகள் உள்ளதாக வடிவமைக்கப்பட்டிருக்கும்.
அதிரடி ஆக்ஷன் படங்களுக்கு பெயர் பெற்ற வித்யுத் ஜம்வாலுக்கு ஏற்றது போன்ற ஒரு ஆக்ஷன் படம் கிடைத்திருக்கிறது, அதுவும் ஒரு ஹாலிவுட் படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இப்படம் 2026 அக்டோபர் 16ம் தேதி வெளியாகவுள்ளது.