ஜெயலலிதா வேடத்தில் வித்யா பாலன்?

ஜெயலலிதா வேடத்தில் வித்யா பாலன்?
ஜெயலலிதா வேடத்தில் வித்யா பாலன்?

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் வித்யா பாலன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுப்பதில் தமிழ் சினிமா உலகில் பெரும் போட்டி நிலவுகிறது. ஜெயலலிதாவின் கதாப்பாத்திரத்தில் நடிப்பதற்காக பல நடிகைகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். சமீபத்தில் த்ரிஷா கூட அந்த வேடத்தில் நடிக்க விரும்புவதாக கூரியிருந்தார். அதே போல ரம்யா கிருஷ்ணன், நயன்தாரா, மஞ்சுமா மோகன் போன்றோவர்களை நடிக்க வைப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகிறனர்.

இந்நிலையில், ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது. பாலிவுட் நடிகையான வித்யா பாலன் தமிழில் உருவாக உள்ள ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க இருப்பதாக தெரிய வந்துள்ளது. இந்தப் படத்தினை ‘மதராசபட்டினம்’, ‘தலைவா’ படங்களின் இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. வித்யா பாலன் ஏற்கெனவே சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்பட்ட போது அதில் நடித்திருந்தார். ‘தி தர்டி பிக்சர்’(The Dirty Picture) என்ற பெயரில் இப்படம் வெளியானது. இப்போது எடுக்கப்பட்டு வரும் ‘என்டிஆர்’ வாழ்க்கை வரலாற்று படத்தில் அவரது மனைவி பாத்திரத்தில் வருகிறார்.

ஏ.எல். விஜய் இயக்க உள்ள ஜெயலலிதாவின் பயோபிக் பற்றிய அதிகாரபூர்வமான அறிவிப்பு ஜெயலலிதாவின் பிறந்த நாளான 2019 பிப்ரவரி 24 அன்று வெளியாக உள்ளதாக தெரிய வந்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com