நான் ஒன்றும் குழந்தை பெற்றுபோடும் இயந்திரம் இல்லை என்று நடிகை வித்யா பாலன் கூறினார்.
கடந்த சில நாட்களுக்கு முன் உடல் நலம் சரியில்லாமல் மருத்துவமனைக்குச் சென்றிருந்தார் நடிகை வித்யா பாலன். அவர் தாய்மை அடைந்திருப்பதாகக் கூறப்பட்டது. இதை மறுத்துள்ள அவர் கூறும்போது, நான் ஒன்றும் குழந்தை பெற்றுபோடும் இயந்திரம் இல்லை. சில தம்பதிகளுக்கு குழந்தை இல்லையென்றாலும் கூட உலக மக்கள் தொகை அதிகரித்துக்கொண்டுதான் இருக்கிறது.
குழந்தை பெற்றுக்கொள்வது எங்கள் தனிப்பிட்ட பிரச்னை. இதைப் பற்றி மற்றவர்கள் ஏன் கவலைப்படுகிறார்கள் என தெரியவில்லை. இருந்தாலும் நம் நாடு அப்படித்தான் இருக்கிறது. அக்கம்பக்கத்து வீட்டினர் மற்றும் உறவினர்கள் இதையே கேட்கிறார்கள். சித்தார்த் ராய் கபூருடன் எனது திருமணம் நடந்துகொண்டிருந்த போது, எனது உறவினர், ‘அடுத்த முறை உங்களைச் சந்திக்கும்போது, மூன்றுபேராக இருக்க வேண்டும்’ என்றார். நான் சிம்பிளாக சிரித்துவிட்டு விட்டுவிட்டேன். அப்போது ஹனிமூனுக்கு எங்கு செல்வது என்பதைக் கூட நாங்கள் தீர்மானிக்கவில்லை. அந்த நேரத்தில் இப்படியா கேட்பது?’ என்று கேட்டார் வித்யா பாலன்.