\
’பிக்பாஸ்’ முகேன் ராவின் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு!

’பிக்பாஸ்’ முகேன் ராவின் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு!

’பிக்பாஸ்’ முகேன் ராவின் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு!
Published on

’பிக்பாஸ்’ சீசன் 3 டைட்டில் வின்னர் முகேன் ராவ்வின் புதிய பட அறிவிப்பு தற்போது வெளியாகியிருக்கிறது.

கடந்த ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 போட்டியாளாரும் டைட்டில் வின்னருமான பாடகர் முகேன் ராவ் ‘வெற்றி’ என்ற புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார்.

இப்படத்தினை இயக்கவிருப்பவர் கடந்த 2011 ஆம் ஆண்டு நானி, நித்யாமேனன் நடிப்பில் வெளியான ‘வெப்பம்’ படத்தின் இயக்குநரும் கெளதம் மேனனின் உதவி இயக்குநராக பணிபுரிந்த அஞ்சனா அலிகான்தான்.

முகேன் ராவிற்கு ஜோடியாக அனுகீர்த்தி வாஸ் நடிக்கவிருக்கிறார். மலேசியாவைச் சேர்ந்த முகேன் ராவின் மயக்கும் குரலுக்கும் பாடல்களுக்கும் உலகம் முழுக்க ரசிகர்கள் இருக்கிறார்கள். இவரது ‘இரு மீன்கள் ஒரு ஓடையில்’ என்ற இசை தொகுப்பு ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com