\
வேட்டையன்
வேட்டையன் X Page

‘வேட்டையன் பராக் பராக் பராக்’ - நாளை வெளியாகிறது ரஜினிகாந்தின் வேட்டையன் ட்ரைலர்!

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள வேட்டையன் படத்தின் ட்ரைலர் நாளை வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Published on

ஜெய் பீம் படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கத்தில், ரஜினிகாந்த் வேட்டையன் படத்தில் நடித்து முடித்துள்ளார். லைகா தயாரித்த இந்த படம் அக்டோபர் 10ஆம் தேதி வெளியாகிறது. இந்த படத்தில் அமிதாப் பச்சன், ஃபகத் பாசில், ராணா டகுபதி, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இவர்களின் கதாபாத்திர அறிமுக வீடியோவை படக்குழு தொடர்ந்து வெளியிட்டு வந்தது.

சமீபத்தில் படத்தின் டீசர் வெளியாகி, அதில் என்கவுன்டரை ஆதரிக்கும் வசனங்கள் இருந்தது சமூக வலைதளங்களில் பேசும் பொருளானது. இந்நிலையில் வேட்டையன் படத்தின் ட்ரைலர் நாளை (அக்டோபர் 2) வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. திரைப்படம் அக்டோபர் 10 அன்று வெளியாக உள்ளது.

வேட்டையன்
Headlines | நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதி முதல் உதயநிதிக்கு 3வது இடம் வரை!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com