சூர்யாவின் அடுத்த படத்தை வெற்றிமாறன் இயக்குகிறார் என்ற தகவலை தயாரிப்பாளர் ‘கலைப்புலி’ தாணு உறுதி செய்துள்ளார்.
‘என்.ஜி.கே’, ‘காப்பான்’ படங்களை தொடர்ந்து சூர்யா நடித்துள்ள திரைப்படம் ‘சூரரை போற்று’. இந்தப் படத்தை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கயிருக்கிறார் என தகவல்கள் வெளியாகியது. அதேசமயம் ‘அசுரன்’ படத்தை தொடர்ந்து விஜய், சூர்யாவுடன் வெற்றிமாறன் இணைகிறார் எனவும் கூறப்பட்டது. இதற்கிடையே நகைச்சுவை நடிகர் சூரியை வைத்து வெற்றிமாறன் ஒரு படத்தை இயக்குகிறார் எனவும் அறிவிப்பு வெளியாகியது. இதனால் சூர்யா மற்றும் விஜயுடன் அவர் இணையும் தகவல் உறுதிப்படுத்தப்படாமல் இருந்தது.
இந்நிலையில் சூர்யாவின் அடுத்த படத்தை வெற்றிமாறன் இயக்குகிறார் என்பதை தயாரிப்பாளர் ‘கலைப்புலி’ தாணு உறுதி செய்திருக்கிறார். இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், “அசுரனின் அசுர வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் வெற்றிமாறன் முதல் முறையாக சூர்யாவுடன் இணையும் ‘சூர்யா 40’ படத்தை ‘தி வி கிரியேஷன்’ தயாரிப்பதில் மட்டற்ற மகிழ்ச்சியும் பெருமையும் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

