ஆண்ட்ரியா - வெற்றிமாறன்
ஆண்ட்ரியா - வெற்றிமாறன்web

”எடிட் செய்ய தயார்’ | ’மனுஷி’ படத்திற்கு சென்சார் வழங்க மறுப்பு.. வழக்கு தொடர்ந்த வெற்றிமாறன்!

வெற்றிமாறன் தயாரிப்பில் நடிகை ஆண்ட்ரியா நடிப்பில் உருவாகியிருக்கும் மனுஷி திரைப்படத்திற்கு தணிக்கை சான்று வழங்க மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Published on

இயக்குநர் கோபி நயினார் இயக்கத்தில் நடிகை ஆண்ட்ரியா நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘மனுசி’. இயக்குநர் வெற்றிமாறனின் க்ராஸ் ரூட் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.

நடிகை ஆண்ட்ரியா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நிலையில், நடிகர்கள் நாசர், தமிழ், ஹக்கிம் ஷா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தின் டிரெய்லரும் வெளியாகி வரவேற்பை பெற்றது.

மனுஷி
மனுஷி

வீட்டில் குடும்பத்துடன் வசிக்கும் பெண்ணை திடீரென கைதுசெய்யும் காவல்துறை, யார் அந்த பெண்? என்ற கேள்வியை நோக்கி பல்வேறு சித்ரவதைகளை செய்வது போல காட்சிகள் இடம்பெற்றுள்ளன. காவல்துறையினரின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் ஆண்ட்ரியா, “எங்க பேர எங்க விருப்பபடி எழுத விடமாட்டீங்களா?”, “சாதி, மதம், நிறம், வர்க்கம் உருவாக்கியிருப்பதை அறிவியல் மூலமா மாத்த விரும்புறேன்”, “ஒரு விளையாட்டுல வெறும் இந்தியனா எப்டி பதில் சொல்ல முடியும்?” போன்ற பல்வேறு எதிர்கேள்விகளை எழுப்புகிறார்.

மனுஷி
மனுஷி

காட்சிகள், வசனங்கள் என மொத்தமாக ட்ரெய்லர் வரவேற்பை பெற்ற நிலையில், படத்தில் தேவையற்ற பல காட்சிகள் இடம்பெற்றிருப்பதாக கூறி தணிக்கை சான்று வழங்கப்படாமல் மறுக்கப்பட்டுள்ளது.

தணிக்கை சான்றுக்கு மறுப்பு.. வெற்றிமாறன் பதில்!

மனுஷி திரைப்படத்தில் மாநில அரசை மோசமாக சித்தரித்துள்ளதாகவும், கம்யூனிச கொள்கையை குழப்பும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறி, சென்சார் சான்று மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் தணிக்கை சான்று வழங்க மறுத்ததை எதிர்த்து வெற்றிமாறன் தரப்பில் வழக்கு கொடுக்கப்பட்டுள்ளது, வெற்றிமாறன் தாக்கல் செய்த மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரவிருக்கிறது.

இந்நிலையில் தணிக்கை சான்று மறுப்பு குறித்து பேசியிருக்கும் வெற்றிமாறன், சென்சார் போர்டின் உறுப்பினர்களின் தனிப்பட்ட கருத்துக்களை தனக்கு தெரிவிக்கவில்லை என்றும், பேச்சு சுதந்திர வரம்புக்குள் வராத காட்சிகளை எடிட் செய்ய தயாராக உள்ளோம் என்றும் கூறியுள்ளார். மேலும் படத்தை மறு ஆய்வு செய்ய நிபுணர் குழுவை அமைக்கக் வேண்டும் என்ற கோரிக்கையையும் வெற்றிமாறன் வைத்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com