வெற்றிமாறனின் ‘விடுதலை’ முதல் பாகம் ட்ரெய்லர் வெளியீடு!

வெற்றிமாறனின் ‘விடுதலை’ முதல் பாகம் ட்ரெய்லர் வெளியீடு!
வெற்றிமாறனின் ‘விடுதலை’ முதல் பாகம் ட்ரெய்லர் வெளியீடு!

இயக்குநர் வெற்றிமாறனின் ‘விடுதலை’ படத்தின் முதல் பாகம் ட்ரெய்லர் மற்றும் ஆடியோ இன்று வெளியானது.

ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மென்ட் எல்ரட் குமார் தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கும் படம் ‘விடுதலை’. இரண்டு பாகங்களாக உருவாகும் இப்படத்தில் விஜய் சேதுபதி, சூரி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களைத் தவிர பவானி ஸ்ரீ, பிரகாஷ்ராஜ், கெளதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், சேத்தன் மற்றும் பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இளையராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். பீட்டர் ஹெய்ன் மாஸ்டர் சண்டைக் காட்சிகளை அமைத்து இருக்கிறார். படத்தின் முதல் பாகம் வரும் மார்ச் 31ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த நிலையில், இன்று (மார்ச் 8) ‘விடுதலை’ படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, இன்று 'விடுதலை' படத்தின் முதல் பாகத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டது. இதன் official trailer வெளியிடப்பட்ட 20 நிமிடங்களிலேயே 67 ஆயிரம் பார்வைகளைப் பெற்றிருப்பதுடன், 15 ஆயிரம் லைக்ஸ்களையும் பெற்றிருக்கிறது. 1000க்கும் மேற்பட்ட கமெண்ட்ஸ்களைப் பெற்று வருகிறது. 

அதில் இடம்பெற்றிருக்கும் ஒரு காட்சியில் நடிகர் சூரி, பெரிய அதிகாரி ஒருவரிடம், ”நான் நன்றாக ஃபயரிங் செய்வேன். எனக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தீர்கள் என்றால், மக்கள் படையைப் பிடிக்க நானும் உதவியாக இருப்பேன்” என்கிறார். அதற்கு அவர், ”கொடுக்குற வேலையையே சரியாகச் செய்யமுடியல; இதுல இது வேற” என சூரியை தரக்குறைவாகப் பேசும் வசனம் ரசிகர்களைக் கண் கலங்கவைக்கிறது. அதேநேரத்தில், “எல்லோருக்கும் பிரச்னை இருக்கத்தான் செய்யும். அதற்காக சாப்பிடாமல் இருக்காதீங்க” என்று காதலி சொல்லும் வசனம் நெஞ்சைக் கிள்ளுகிறது.

அப்பாவி பெண்களைக் காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கும் காவல் துறையின் காட்சிகள் போலீஸ் மீதே வெறுப்பை ஏற்படுத்துகிற போதிலும், சூரி உயர் அதிகாரியை அடிப்பேன் என்று சொல்கிறபோது கைதட்டல் பெறுகிறது. மொத்தத்தில் வேகமும் விறுவிறுப்பும் நிறைந்ததாக விடுதலை படத்தின் முதல் பாகம் ட்ரெய்லர் அமைந்துள்ளது. இதன்மூலம், இயக்குநர் வெற்றிமாறன் மீண்டும் ஒரு வெற்றிக்கனியைத் தந்திருக்கிறார் என்றே சொல்லலாம்.

- ஜெ.பிரகாஷ்

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com