\
பழம்பெரும் நடிகை கீதாஞ்சலி மாரடைப்பால் காலமானார்

பழம்பெரும் நடிகை கீதாஞ்சலி மாரடைப்பால் காலமானார்

பழம்பெரும் நடிகை கீதாஞ்சலி மாரடைப்பால் காலமானார்
Published on: 

பழம்பெரும் நடிகை கீதாஞ்சலி மாரடைப்பு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 72.

தமிழில், சாரதா, தெய்வத்தின் தெய்வம், எம்.ஜி.ஆரின் தாயின் மடியில், பணம் படைத்தவன், என் எண்ணன், ஆசைமுகம், அன்னமிட்ட கை, சிவாஜியின் நெஞ்சிருக்கும் வரை,  ஜெமினிகணேசனின் கங்கா கவுரி உட்பட பல படங்களில் நடித்திருப்பவர் கீதாஞ்சலி.  தமிழ் தவிர, தெலுங்கு, மலையாளம், இந்தி மொழிகளில் ஏராளமான படங்களிலும் நடித்துள்ளார்.

ஐதராபாத்தில் வசித்து வந்த இவருக்கு கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அதற்காக ஐதராபாத் பிலிம் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் மாரடைப்பு காரணமாக இன்று காலை காலமானார். 

மறைந்த கீதாஞ்சலியின் கணவர் ராமகிருஷ்ணாவும் பிரபல நடிகர் ஆவார். அவர் ஏற்கெனவே இறந்துவிட்டார். 
மறைந்த கீதாஞ்சலிக்கு அதித் ஸ்ரீனிவாஸ் என்ற மகன் உள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com