பிரபல இயக்குனர் சி.வி.ராஜேந்திரன் காலமானார்!

பிரபல இயக்குனர் சி.வி.ராஜேந்திரன் காலமானார்!

பிரபல இயக்குனர் சி.வி.ராஜேந்திரன் காலமானார்!
Published on

பிரபல திரைப்பட இயக்குனர் சி.வி.ராஜேந்திரன் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு அவருக்கு வயது 81.

பிரபல திரைப்பட இயக்குனர் ஸ்ரீதரின் சகோதரர் சி.வி.ராஜேந்திரன். ஸ்ரீதர் இயக்கிய படங்களில் உதவி மற்றும் இணை இயக்குனராக பணியாற்றிய ராஜேந்திரன், முத்துராமன் நடித்த ’அனுபவம் புதுமை’ என்ற படத்தின் மூலம் இயக்குனர் ஆனார். நில் கவனி காதலி, சுமதி என் சுந்தரி, ராஜா, நீதி, சிவகாமியின் செல்வன், உல்லாச பறவைகள், ஆனந்த், சின்னப்பதாஸ் உட்பட ஏராளமான படங்களை இயக்கியுள்ளார். தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி படங்களையும் இயக்கியுள்ளார். விஜய், சிவாஜி கணேசன் நடித்த ஒன்ஸ்மோர், பிரபு நடித்த வியட்நாம் காலனி ஆகிய படங்களையும் தயாரித்துள்ளார். சிவாஜி கணேசன் நடிப்பில் மட்டும் 14 படங்களை இயக்கியுள்ளார் இவர்.

சென்னை தி.நகரில் குடும்பத்தினருடன் வசித்து வந்த சி.வி.ராஜேந்திரன் கடந்த சில மாதங்களாக உடல் நலமில்லாமல் இருந்தார். இந்நிலையில் இன்று காலை காலமானார்.

மறைந்த சி.வி ராஜேந்திரனுக்கு ஜானகி என்ற மனைவியும் பத்மஜா என்ற மகள், ராஜீவ் என்ற மகன் உள்ளனர். பத்மஜாவும் ராஜீவ்வும் அமெரிக்காவில் இருப்பதால் அவர்கள் வந்த பின் இறுதி சடங்கு நடைபெறும் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

 மறைந்த ராஜேந்திரன் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக, தி.நகரில் உள்ள அவரது வீட்டுக்கு மருத்துவமனையில் இருந்து கொண்டு வரப்படுகிறது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com