\
கமலுடன் நடித்த பிரபல நடிகை ரிதா பாதுரி மரணம்

கமலுடன் நடித்த பிரபல நடிகை ரிதா பாதுரி மரணம்

கமலுடன் நடித்த பிரபல நடிகை ரிதா பாதுரி மரணம்
Published on

பிரபல இந்தி நடிகை ரிதா பாதுரி உடல்நலக்குறைவு காரணமாக இன்று அதிகாலை மரணமடைந்தார். அவருக்கு வயது 62.

பிரபல இந்தி நடிகை ரிதா பாதுரி. 70-களில் வெளியான ராஜா, ஜூலி, தில் வில் பியார் வியார் உட்பட சுமார் 70 இந்தி படங்களில் நடித்துள்ளார். 90 வரை துணை நடிகையாக நடித்து வந்த இவர், சில படங்களில் ஹீரோயினாகவும் நடித்துள்ளார். ஏராளமான குஜராத்தி படங்களிலும் நடித்துள்ளார். கமல்ஹாசன் மலையாளத்தில் ஹீரோவாக நடித்த முதல்படம் ’கன்னியாகுமாரி’. சேதுமாதவன் இயக்கிய இந்த படத்தில் கமல்ஹாசன் ஜோடியாக ரிதா பாதுரி நடித்துள்ளார்.

இப்போது இந்தி சீரியல்களில் நடித்து வந்த ரிதா, கடந்த சில நாட்களாக சிறுநீரக பிரச்னை காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார். இந்நிலையில் இன்று அதிகாலை மரணமடைந்தார். அவரது உடல் மும்பை அந்தேரியில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.

ஏராளமான திரையுலகினர் மற்றும் சின்னத்திரையினர் அவர் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவரது இறப்பு இந்தி சின்னத்திரை உலகுக்கு பெரிய இழப்பு என்று டிவி நடிகர்கள் கூறியுள்ளனர். இறுதிச் சடங்கு இன்று மாலை நடக்கிறது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com