பாலிவுட் பாட்ஷா சஷி கபூர் மறைந்தார்

பாலிவுட் பாட்ஷா சஷி கபூர் மறைந்தார்

பாலிவுட் பாட்ஷா சஷி கபூர் மறைந்தார்
Published on

பாலிவுட் பாட்ஷா நடிகர் சஷி கபூர் மறைந்தார் என சற்று நேரத்திற்கு முன் செய்தி வெளியாகி உள்ளது.

பிரிட்டிஷ் இந்தியாவில் பெங்கால் பிரசிடென்சியாக இருந்த காலத்தில் 1938 ஆண்டு மார்ச் மாதம் இவர் பிறந்தார். நடிகர், டைரக்டர், தயாரிப்பாளர் என இவருக்கு பல முகங்கள் உண்டு. 1941ல் இருந்து 1990 வரை மிக தீவிரமாக இயங்கியவர் சஷி. இவர் பெரும்பாலான இந்திப் படங்களில் நடித்தவர். ஒரு சில ஆங்கிலப் படங்களிலும் நடித்த அனுபவம் பெற்றவர். உதவி இயக்குனராக தொடங்கிய இவரது சினிமா வாழ்க்கை பெரிய உச்சத்தை தொட்டது.

2011 ஆம் ஆண்டு மத்திய அரசு இவருக்கு பத்ம பூஷன் விருது அளித்து கெளரவித்தது. அது ஒரு ஆர்ட் ஃபில்ம். 2014 ஆம் ஆண்டு தாதா சாகிப் பால்கே விருதை பெற்றார். இவரது தந்தை பிரித்விராஜ் கபூர் இயக்கிய நாடகங்களில் நடித்த அனுபவமும் இவருக்கு உண்டு. 1940களில் குழந்தை நட்சத்திரமாகவும் நடித்துள்ளார். இவரது இழப்பு இந்திய சினிமாவுக்கு பெரிய இழப்பாகும்.அவருக்கு வயது 79.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com