\
சிம்பு, வெங்கட் பிரபு கூட்டணியின் அரசியல் ‘மாநாடு’!

சிம்பு, வெங்கட் பிரபு கூட்டணியின் அரசியல் ‘மாநாடு’!

சிம்பு, வெங்கட் பிரபு கூட்டணியின் அரசியல் ‘மாநாடு’!
Published on

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படத்துக்கு ’மாநாடு’ என்று டைட்டில் வைத்துள்ளனர்.

மணிரத்னம் இயக்கும் 'செக்கச் சிவந்த வானம்' படத்தில் நடித்துள்ளார் சிம்பு. இதன் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இதில், அரவிந்த் சாமி, விஜய் சேதுபதி, ஜோதிகா, அருண் விஜய், ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ், பிரகாஷ் ராஜ் உட்பட பலர் நடித்துள்ளனர். 

இதை அடுத்து சிம்பு நடிக்கும் படத்தை வெங்கட் பிரபு இயக்குவதாக செய்திகள் வெளியானது. அது உண்மைதான் என்று அறிவித்தார் வெங்கட் பிரபு. ’சிம்புவை இயக்குவது உண்மைதான். மற்ற விஷயங்கள் ஏதும் முடிவாகவில்லை’ என்று கூறியிருந்தார்.

வெங்கட்பிரபு இப்போது ’பார்ட்டி’ படத்தை முடித்துள்ளார். இதில் சத்யராஜ், ஷாம், ஜெயராம், ஜெய், சிவா, ரெஜினா உட்பட பலர் நடித்துள்ளனர். ரிலீஸுக்கு தயாராக இருக்கும் இந்தப் படத்தை அம்மா கிரியேஷன்ஸ் சிவா தயாரித்துள்ளார். இந்தப் பட ரிலீஸுக்குப் பிறகு சிம்பு படத்தை இயக்குகிறார். இதை வி ஹவுஸ் புரொடக்‌ஷன்ஸ் சார்பாக சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். இந்த படத்துக்கு ’அதிரடி’ என்று டைட்டில் வைத்திருப்பதாக முதலில் கூறப்பட்டது. இப்போது படத்தின் டைட்டில் ’மாநாடு’ என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இது அரசியல் படம் என்றும் அரசியல் நையாண்டியை மையமாக வைத்து படம் உருவாகிறது என்றும் கூறப்படுகிறது.

மற்ற நடிகர், நடிகைகள் தொழில் நுட்பக் கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. ஹீரோயினாக கீர்த்தி சுரேஷ் நடிப்பார் என்று தெரிகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com