அஜித்தின் ‘மங்காத்தா’ படத்தை மீண்டும் வெளியிட கோரிக்கை வைத்த வெங்கட் பிரபு!

அஜித்தின் ‘மங்காத்தா’ படத்தை மீண்டும் வெளியிட கோரிக்கை வைத்த வெங்கட் பிரபு!

அஜித்தின் ‘மங்காத்தா’ படத்தை மீண்டும் வெளியிட கோரிக்கை வைத்த வெங்கட் பிரபு!
Published on

அஜித் நடிப்பில் சூப்பர் ஹிட் அடித்த ‘மங்காத்தா’ படத்தை மீண்டும் ரிலீஸ் செய்ய இயக்குநர் வெங்கட் பிரபு அப்படத்தின் தயாரிப்பாளர் தயாநிதி அழகிரிக்கு கோரிக்கை வைத்திருக்கிறார்.

கடந்த 2011 ஆம் ஆண்டு வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித், அர்ஜுன், த்ரிஷா நடிப்பில் வெளியான ’மங்காத்தா’வில் அஜித் வில்லனாக நடித்து பாராட்டுகளை குவித்தார். அஜித்தின் 50 வது படமான ’மங்காத்தா’ படமும் பாடல்களும் மட்டுமல்ல வசனங்கள்கூட சூப்பர் ஹிட் அடித்தன. இதனால், அஜித் ரசிகர்கள் ’மங்காத்தா 2’எதிர்பார்த்து காத்துக்கொண்டிருகிறார்கள்.

இன்று அஜித் நடித்துவரும் ‘வலிமை’ படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் வலிமை ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அவரின் 50-வது பிறந்தநாளையொட்டி மே 1 வெளியாகும் என்று அறிவித்துள்ளார்.

இந்நிலையில் இயக்குநர் வெங்கட் பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் “தயா அழகிரி சார் தல 50-வது பிறந்தநாளையொட்டி நம்ம தலயின் 50 வது படமான மங்காத்தாவை எப்படியாவது ஏப்ரல் 30 ஆம் தேதி ரீ-ரிலீஸ் பண்ணா, ஃபேன்ஸ் நாங்க உங்களுக்கு ரொம்ப கடமைப்பட்டிருப்போம். பாத்து செய்ங்க” என்று கோரிக்கை வைத்திருக்கிறார். இரு நாட்களுக்கு முன்புதான் அஜித்தின் ‘பில்லா’ படம் தியேட்டர்களில் வெளியானது. இந்நிலையில், விரைவில் ‘மங்காத்தா’ படமும் வெளியாகும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com