\
சிம்புவின் ‘வெந்து தணிந்தது காடு’ பட 4 நாட்கள் வசூல் எவ்வளவு?

சிம்புவின் ‘வெந்து தணிந்தது காடு’ பட 4 நாட்கள் வசூல் எவ்வளவு?

சிம்புவின் ‘வெந்து தணிந்தது காடு’ பட 4 நாட்கள் வசூல் எவ்வளவு?
Published on: 

நடிகர் சிம்புவின் ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படத்தின் நான்கு நாட்கள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் சிம்பு - இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் - இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோர் 3-வது முறையாக இணைந்துள்ளப் படம் ‘வெந்து தணிந்தது காடு’. இந்தப் படத்தில், சிம்புக்கு ஜோடியாக நடிகை சித்தி இத்னானி நடித்துள்ளார்.

மூத்த நடிகையான ராதிகா, சிம்புவிற்கு அம்மாவாக நடித்துள்ளார். சித்திக், நீரஜ் மாதவ், டெல்லி கணேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த 15-ம் தேதி வெளியான இந்தத் திரைப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

மேலும் இந்தப் படத்தின் ‘மல்லிப்பூ’ பாடல் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில், இந்தப் படத்தின் நான்கு நாட்கள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, உலகம் முழுவதும் நான்கு நாட்களில் இந்தப் படம் 44. 6 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. தமிழகத்தில் மட்டும் 34.85 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com