‘வெந்து தணிந்தது காடு’ - டீசருடன் வெளியானது மாஸ் அப்டேட்! குஷியில் சிம்பு ரசிகர்கள்

‘வெந்து தணிந்தது காடு’ - டீசருடன் வெளியானது மாஸ் அப்டேட்! குஷியில் சிம்பு ரசிகர்கள்

‘வெந்து தணிந்தது காடு’ - டீசருடன் வெளியானது மாஸ் அப்டேட்! குஷியில் சிம்பு ரசிகர்கள்
Published on

சிம்புவின் ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படத்தின் வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

'மாநாடு' படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் 'வெந்து தணிந்தது காடு' படத்தில் நடித்து முடித்துள்ளார் சிம்பு. விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படத்திற்கு பிறகு சிம்பு, கௌதம் வாசுதேவ் மேனன் 3-வது முறையாக 'வெந்து தணிந்தது காடு' படத்தில் இணைந்துள்ளதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

இந்நிலையில் இந்தப்படத்தின் புதிய அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி ‘வெந்து தணிந்தது காடு’ படம் செப்டம்பர் 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதற்காக படக்குழுவினர் யூடியூப்பில் வெளியிட்டுள்ள புதிய டீசர் வீடியோ வியூஸ்களை குவித்து வருகிறது.

இதையும் படிக்கலாம்: `எதிரொலியும் இல்ல, ஒலியும் ஒளியும் இல்ல’ - 20 வருடங்களான சிரிப்பு மெடிசின் `பஞ்சதந்திரம்!’


Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com