\
வேலூர்: ’வலிமை’ பட திரையரங்கு முன்பு மேள, தாளத்துடன் நடனமாடிய அஜித் ரசிகர்கள்!

வேலூர்: ’வலிமை’ பட திரையரங்கு முன்பு மேள, தாளத்துடன் நடனமாடிய அஜித் ரசிகர்கள்!

வேலூர்: ’வலிமை’ பட திரையரங்கு முன்பு மேள, தாளத்துடன் நடனமாடிய அஜித் ரசிகர்கள்!
Published on

’வலிமை’ நாளை வெளியாவதையொட்டி வேலூர் அஜித் ரசிகர்கள் மேளதாளத்துடன் நடனமாடி கொண்டாடியுள்ளனர்

‘நேர்கொண்ட பார்வை’ வெற்றிக்குப்பிறகு அஜித் மீண்டும் ஹெச்.வினோத் இயக்கத்தில் ‘வலிமை’ படத்தில் நடித்துள்ளார். நாயகியாக பாலிவுட் நடிகை ஹீமா குரேஷி நடித்துள்ளார். வில்லனாக கார்த்திகேயா நடித்துள்ளார். ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் போனி கபூர் இணைந்து தயாரித்துள்ள ‘வலிமை’ நாளை வெளியாவதையொட்டி தமிழகம் முழுக்க அஜித் ரசிகர்கள் திருவிழா போல் கொண்டாடி வருகிறார்கள்.

இரண்டரை ஆண்டுகளுக்குப்பிறகு வெளியாகும் அஜித்தின் படம் என்பதால் தியேட்டர்களில் போஸ்டர் வைப்பது, நடனம் ஆடுவது என்று வெறித்தனமான வலிமையை காட்டி வருகிறார்கள். இந்த நிலையில், ’வலிமை’ படத்தை வரவேற்கும் வகையில் வேலூர் அங்கார் திரையரங்கு முன்பு பைக் ஸ்டண்ட் செய்தும், மேள தாளத்துடன் நடனம் ஆடியும் இன்று கொண்டாடினர். இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com