சிவ கார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘வேலைக்காரன்’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று வெளியாகியுள்ளது.
ரெமோ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, மோகன் ராஜா இயக்கத்தில் “வேலைக்காரன்” திரைப்படத்தில் சிவ கார்த்திகேயன் நடித்து வருகிறார். ‘தனி ஒருவன்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மோகன் ராஜா இயக்கும் படம் என்பதால், இந்த படத்திற்கு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.