\
‘வேலைக்காரன்’ படத்திற்கு யு சான்றிதழ்

‘வேலைக்காரன்’ படத்திற்கு யு சான்றிதழ்

‘வேலைக்காரன்’ படத்திற்கு யு சான்றிதழ்
Published on

சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘வேலைக்காரன்’ திரைப்படத்திற்கு யு சான்றிதழ் கிடைத்துள்ளதாக ட்விட்டர் பக்கத்தில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘வேலைக்காரன்'. இதை மோகன் ராஜா இயக்கியுள்ளார். முதன்முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக  நயன்தாரா நடித்துள்ளார். மேலும், முக்கிய வேடங்களில் ஃபகத் ஃபாஸில், சினேகா, பிரகாஷ் ராஜ், தம்பி ராமையா, ரோபோ ஷங்கர், ஆர்.ஜே.பாலாஜி, யோகி பாபு, விஜய் வசந்த், சதீஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.

‘24 ஏஎம் ஸ்டுடியோஸ்’ நிறுவனம் சார்பில் ஆர்.டி.ராஜா இப்படத்தை தயாரித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ள இதற்கு ராம்ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார், ரூபன் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். படம் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வருகிற டிசம்பர் 22ஆம் தேதி உலகம் எங்கும் திரையிடப்பட உள்ளது. இந்நிலையில் படத்திற்கு ‘யு’ சான்றிதழ் கிடைத்துள்ளதாக இயக்குநர் மோகன்ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com