\
நிறைவடைந்தது வேலைக்காரன் படப்பிடிப்பு

நிறைவடைந்தது வேலைக்காரன் படப்பிடிப்பு

நிறைவடைந்தது வேலைக்காரன் படப்பிடிப்பு
Published on

சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் வேலைக்காரன் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. 

தனி ஒருவன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா முதன்முதலாக ஜோடி சேர்ந்து நடித்திருக்கும் வேலைக்காரன் படத்திற்கு ரசிகர்களிடம் எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது. மலையாள நடிகர் பகத் பாஸில் வில்லனாக இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். மேலும் சினேகா, ரோகினி, ஆர்.ஜே.பாலாஜி, தம்பி ராமைய்யா, சதீஷ், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு கடந்தாண்டு டிசம்பர் மாதம் தொடங்கி நடைபெற்று வந்தது. சமூக பிரச்சனையை மையமாக வைத்து உருவாகி வரும் இப்படத்தின் இறுதி பாடல்காட்சி ஒன்று, ராஜஸ்தான் அஜ்மீர் தர்ஹா பகுதில் கடந்த வாரம் எடுக்கப்பட்டது.மேலும் சில காட்சிகள் சென்னையில் எடுக்கப்பட்டு வந்தன.இந்த நிலையில், மொத்தப் படப்பிடிப்பும் தற்சமயம் நிறைவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், திட்டமிட்டபடி டிசம்பரில் வேலைக்காரன் திரைக்கு வர இருக்கிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com