\
வெளியானது வேலைக்காரன் இரண்டாவது போஸ்டர்

வெளியானது வேலைக்காரன் இரண்டாவது போஸ்டர்

வெளியானது வேலைக்காரன் இரண்டாவது போஸ்டர்
Published on

 வேலைக்காரன் படத்தின் இரண்டாவது போஸ்டர் பகத் ஃபாசிலின் பிறந்தநாளையொட்டி இன்று வெளியிடப்பட்டுள்ளது.

மோகன் ராஜா-சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவாகி வரும் படம் ‘வேலைக்காரன்’. சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் மலையாள நடிகர் பகத் ஃபாசிலும் நடித்துள்ளார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஜூன் மாதம் 5ஆம் தேதி வெளியிடப்பட்ட நிலையில், படத்தின் இரண்டாவது போஸ்டர் பகத் ஃபாசிலின் பிறந்தநாளான இன்று வெளியிடப்பட்டுள்ளது.  

இந்த புதிய போஸ்டரை சிவகார்த்திகேயனும், "24 ஏஎம் ஸ்டூடியோஸ்" நிறுவனத்தினரும் அவர்களின் ட்விட்டர் பக்கங்களில் வெளியிட்டுள்ளனர். சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகத் ஃபாசிலுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களையும் பதிவிட்டுள்ளார் 

வேலைக்காரன் படம் தொடர்பான அறிவிப்புகள் நாளுக்கு நாள் வெளிவந்து படத்தின் மீதான எதிர்பார்ப்புகளை அதிகரித்துள்ளது. மேலும் படத்தின் டீசர் ஆகஸ்ட் 14ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com