அனிருத் இல்லைனா நான் இல்லை: சிவகார்த்திகேயன் பேச்சு

அனிருத் இல்லைனா நான் இல்லை: சிவகார்த்திகேயன் பேச்சு

அனிருத் இல்லைனா நான் இல்லை: சிவகார்த்திகேயன் பேச்சு
Published on

’அனிருத் இல்லைன்னா, சிவகார்த்திகேயன் இல்லை என்று ட்விட்டரில் பலரும் சொல்வார்கள். அது உண்மைதான்’ என்று நடிகர் சிவகார்த்திகேயன் கூறினார்.

சிவகார்த்திகேயன், நயன்தாரா நடித்துள்ள படம், ’வேலைக்காரன்’. மோகன் ராஜா இயக்கியுள்ள இந்தப் படத்தை 24ஏஎம் ஸ்டுடியோஸ் சார்பில் ஆர்டி ராஜா தயாரித்துள்ளார். ராம்ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. 

விழாவில் சிவகார்த்திகேயன் பேசும்போது,  ’வேலைக்காரன்' தலைவர் பட டைட்டில். அதை வைப்பதா? என முதலில் யோசித்தேன். படத்துக்கு பொருத்தமான தலைப்பு என்று இயக்குனர் ராஜா சார் சொன்னதால் வைத்தோம். ஃபகத் பாஸில் இந்த படத்தில் நடித்தது எங்களுக்கு கிடைத்த அதிர்ஷ்டம். அவர் சர்வதேச நடிகர். ’ஏகன்’ ஷூட்டிங்கில் தான் முதன் முதலில் நயன்தாராவை பார்த்தேன். பிறகு வேலைக்காரன் ஷூட்டிங்கில் தான் அவரை சந்தித்தேன். அவரின் தன்னம்பிக்கை தான் அவருக்கென தனி மார்க்கெட்டை உருவாக்கியிருக்கிறது. அனிருத் இல்லைன்னா, சிவகார்த்திகேயன் இல்லைனு ட்விட்டரில் பலரும் சொல்வார்கள். அது உண்மை. அதை கேட்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. ரசிகர்கள் எனக்கு நிறைய கொடுத்திருக்கிறீங்க, அதை எப்படி திருப்பி கொடுப்பேன்னு தெரியல. ரசிகர்களுக்கு நான் கொடுக்கும் பரிசு, இந்த வேலைக்காரன்’ என்றார். 

நடிகர்கள் ரோபோ ஷங்கர், சதீஷ், ஆர் ஜே பாலாஜி, காளி வெங்கட், மன்சூர் அலிகான், விஜய் வசந்த், கலை இயக்குனர் முத்துராஜ், பாடலாசிரியர்கள் அறிவுமதி, விவேகா, மதன் கார்க்கி, எடிட்டர் மோகன் உட்பட பலர் பேசினர்.

7 வேலைக்காரர்களை தேர்வு செய்து, அவர்கள் முன்னிலையில் வெளியிடப்பட்டது. முன்னதாக அனிருத் லைவ்வாக பாடல்களை பாடினார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com