'மாநாடு படத்தை திரைக்கதைக்கான மாஸ்டர் வகுப்பில் சேர்க்கலாம்''- இயக்குநர் வசந்தபாலன்

'மாநாடு படத்தை திரைக்கதைக்கான மாஸ்டர் வகுப்பில் சேர்க்கலாம்''- இயக்குநர் வசந்தபாலன்
'மாநாடு படத்தை திரைக்கதைக்கான மாஸ்டர் வகுப்பில் சேர்க்கலாம்''- இயக்குநர் வசந்தபாலன்

மாநாடு திரைப்படம் பேசும் அரசியல் கவனிக்கப்பட வேண்டியது என இயக்குநர் வசந்தபாலன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள இயக்குநர் வசந்தபாலன், ''மிக மிக தாமதமாக இன்று காலை தான் மாநாடு திரைப்படம் பார்த்தேன். திரைக்கதையாக மிக மிக கூர்மையாக அமைக்கப்பட்டிருக்கிறது. திரைக்கதைக்கான மாஸ்டர் வகுப்பில் சேர்க்கப்பட வேண்டிய திரைக்கதை.விக்ரம் வேதா திரைப்படத்திற்கு பிறகு தமிழில் வந்த முக்கிய திரைக்கதை ஆளுமையுள்ள திரைப்படம்.
சுவாரஸ்யம் குறையாதவாறும் டைம் லூப் என்கிற யுக்தி கடைசி ரசிகனுக்கும் மிக எளிமையாக புரியும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது தான் சிறப்பு.

மனமார்ந்த வாழ்த்துகள் Venkat Prabhu. இந்த குண்டுவெடிப்பின் மூலம் ஒரு சமூகத்தின் பெயர் பாழ்பட்டுவிடக்கூடாது ஏற்கனவே ஒரு பிரதமர் மரணத்தில் ஒரு இனத்தின் பெயர் பாதிக்கப்பட்டது என்கிற இடத்தில் பேசுகிற அரசியல் மிகவும் கவனிக்கப்பட வேண்டியது. சிம்புவும் எஸ் ஜே சூர்யா அவர்களும் மிக சரியான நடிப்பால் படத்தை தங்கள் தோள்களில் தாங்கியிருக்கிறார்கள்.எடிட்டிங்கில் பிரவீன் அதி சிரத்தையாக ஈடுபட்டு வெற்றி கண்டுள்ளார்.மாநாடு குழுவினர் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்'' என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com