\
விஜய்யுடன் இணைந்தார் வரலக்ஷ்மி

விஜய்யுடன் இணைந்தார் வரலக்ஷ்மி

விஜய்யுடன் இணைந்தார் வரலக்ஷ்மி
Published on

விஜய்யுடன் இணைந்து நடிக்கிறார் நடிகை வரக்ஷ்மி. அதற்கான அறிவுப்பு அதிகாரபூர்வமாக வெளியாகியுள்ளது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் ‘விஜய்62’. இதற்கு இன்னும் பெயர் வைக்கப்படவில்லை. இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி கொல்கத்தா சென்றது. பின்பு, சென்னையில் செட் அமைத்து ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தில் விஜய் பங்கேற்ற காட்சிகள் சில சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலானது. ஆகவே மிகுந்தக் கட்டுப்பாடுடன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நடிகை வரலக்ஷ்மி முதன் முறையாக விஜய் உடன் இணைந்து முக்கிய பாத்திரம் ஒன்றில் நடிக்கிறார். அதற்கான அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் முறையாக அறித்துள்ளது. இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் “பிறந்தநாளில் அறிவிப்பு வெளியாகியது உற்சாகமாக உள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com