ஜானி மாஸ்டர் to பிரகாஷ்ராஜ்; வாரிசு இசை வெளியீட்டு விழாவில் பிரபலங்கள் பேசியதன் முழுவிபரம்

ஜானி மாஸ்டர் to பிரகாஷ்ராஜ்; வாரிசு இசை வெளியீட்டு விழாவில் பிரபலங்கள் பேசியதன் முழுவிபரம்
ஜானி மாஸ்டர் to பிரகாஷ்ராஜ்; வாரிசு இசை வெளியீட்டு விழாவில் பிரபலங்கள் பேசியதன் முழுவிபரம்

வாரிசு திரைப்படம் இன்றைய தலைமுறையினருக்கு மிகவும் அவசியமானது என்றும், படம் வாழ்க்கையைப் பற்றிய நேர்மறையான விஷயத்தை பகிர்ந்து கொள்ளும் என்று தெரிவித்துள்ளார் நடிகர் பிரகாஷ் ராஜ்.

நடிகர் விஜய், ராஷ்மிகா மந்தனா, யோகி பாபு, சங்கீதா, சரத்குமார், ஸ்ரீகாந்த், ஷாம், பிரகாஷ்ராஜ், குஷ்பு, ஜெயசுதா உள்ளிட்ட பல நட்சத்திரங்களின் நடிப்பில், தமிழில் ‘வாரிசு’ என்றப் பெயரிலும், தெலுங்கில் ‘வாரசுடு’ என்ற பெயரிலும் இருமொழிகளில் உருவாகியுள்ளது விஜயின் 67ஆவது படமான வாரிசு. இந்தத் திரைப்படத்தை தெலுங்கு இயக்குநரான வம்சி பைடிபள்ளி இயக்கி, தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரித்து, படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருகிற ஜனவரி மாதம் 12-ஆம் தேதி திரையரங்குகளில் ‘வாரிசு’ திரைப்படம் வெளியாக உள்ளது.

கொரோனா முடிந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு விஜய்யின் ‘வாரிசு’ ஆடியோ வெளியீட்டு விழா மிகப் பிரம்மாண்டமாக சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. ஆடியோ விழாவிற்காக பிரம்மாண்டமான முறையில் மேடை அமைக்கப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் விஜயின் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகரன், தாய் ஷோபா கலந்து கொண்டனர். அதேபோல், படத்தில் நடித்த பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

ஜானி மாஸ்டர்:

ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய டான்ஸ் மாஸ்டர் ஜானி, “நான் நிறைய ஹீரோக்களுடன் பணியாற்றியுள்ளேன். என்னைப் பொறுத்தரையில் தெலுங்கில் பவன் கல்யாண் என்னுடைய பேவரெட். ஆனால் இப்போது விஜய் சார் என்னுடைய பேவரட் ஆக மாறியுள்ளார். எல்லா இளம் திறமையாளர்களையும் அவர் ஊக்குவிக்கிறார்” என்று பேசியுள்ளார்.

ராஷ்மிகா மந்தனா:

விஜய் குறித்து பேசிய ராஷ்மிகா மந்தனா, கில்லி படத்தின் முதல் நாள் முதல் ஷோவை எனது அப்பா உடன் பார்த்தேன். அதுலருந்து நான் விஜய் ஃபேன் ஆயிட்டேன். என்னுடைய ஃபேவரட் & க்ரஷ் விஜய் சார். வாரிசு பட பூஜையின் போது என்னுடைய ஹாட் பீட் எகிறியது. நான் நடுங்கிக் கொண்டிருந்தேன் என்று கூறினார்.

பிரகாஷ் ராஜ்:

படம் குறித்து பேசியிருக்கும் பிரகாஷ் ராஜ், வாரிசு முதல்கட்ட படப்பிடிப்பின் போது விஜய் சார் என்னிடம் வந்து ‘செல்லாம், இந்த கண்ண இவ்ளோ பக்கத்துல பாத்து எவ்ளோ நாள் ஆச்சு’ என்று சொன்னார். வாரிசு படத்தோட க்ளைமாக்ஸில் விஜய்யின் நடிப்பை பார்த்து நீங்க உணர்ச்சிவசப்படப் போறீங்க. வாரிசு படம் வாழ்க்கையைப் பற்றிய நேர்மறையான விஷயத்தை பகிர்ந்து கொள்ளும். இது தற்போதைய தலைமுறைக்கு மிகவும் அவசியமானது என்று பேசியுள்ளார்.

சரத்குமார்:

மேலும் மேடையில் பேசிய சரத்குமார், விஜய் தான் எதிர்காலத்தில் சூப்பர் ஸ்டார் என்று சூர்ய வம்சம் படத்தின் 175 நாள் விழாவில் நான் சொன்னேன். தற்போது அது நடந்துவிட்டது. விஜய் தான் இப்போது சூப்பர் ஸ்டார். நான் அப்போது இதை சொன்ன போது கலைஞர் கூட ஆச்சர்யப்பட்டார் என்று கூறியுள்ளார்.

தயாரிப்பாளர் லலித்:

தொடர்ந்து 7 ஸ்க்ரீன் ஸ்டியோ தயாரிப்பாளர் லலித் பேசுகையில், திரையரங்கு திறக்கனும், என் ரசிகர்கள் தியேட்டர்ல படங்கள பாக்கனும் னு தளபதி பிடிவாதமா இருந்ததால ரிலீஸ் ஆனதுதான் மாஸ்டர் படம். ஓடிடியில் மாஸ்டர் படத்தை வெளியிட பெரிய ஆஃபர் கிடைத்தது. ஆனால், தியேட்டர்களுக்கு நாம்தான் ஆதரவு கொடுக்கணும் என்று விஜய் சொன்னார். விஜய் சாரின் சினிமா வாழ்க்கையிலேயே இதுவரை பார்த்திராத அளவிற்கு வாரிசு மிகப்பெரிய ரிலீஸ் ஆக இருக்கும் என்று கூறியுள்ளார்.

இசையமைப்பாளர் தமன்:

வாரிசு படத்தில் இசையமைத்தது குறித்து பேசிய இசையமைப்பாளர் தமன், என் பையன் பத்தாவது படிக்கிறான். ஒவ்வொரு நாளும் ஸ்கூல் போகும்போது, நல்லா மியூசிக் போட்டு என் மானத்தைக் காப்பாத்திடுன்னு சொல்லிட்டே போவான். இயக்குநர் வம்சி மாட்டு வண்டிக்கு அலாய் வீலு போட்டு சுத்திருக்காரு. அதுதான் இந்த 'வாரிசு'. என் 27 வருட காத்திருப்புதான் 'வாரிசு', சென்னையில் பிறந்து வளர்ந்த எனக்கு இன்றைக்குதான் வாழ்க்கை முழுமையடைந்திருக்கிறது. நான்* வாங்கிய விருதுகளைவிட உங்களின் பாராட்டுகள்தான் எனக்கு பெருசு” என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com