Varalaxmi changed her movie name into S Saraswathi after CBFC said
Varalaxmi SarathkumarS Saraswathi

சரஸ்வதி கடவுள் பெயர், CBFC வைத்த செக்.. பெயரை மாற்றிய படக்குழு! | S Saraswathi

சுஹாஸ் நடித்து வெளியான `Hey Balwanth' படத்திற்கு முன்பு வைக்கப்பட்ட பெயர் `Hey Bhagawan'. இந்தப் பெயரை மாற்ற வேண்டும் என தணிக்கை வாரியம் கூற பெயர் மாற்றப்பட்டு வெளியிடப்பட்டது.
Published on

வரலட்சுமி சரத்குமார் இயக்குநராக அறிமுகமாகும் படம் `சரஸ்வதி'. இப்படத்தில் வரலட்சுமியுடன் பிரகாஷ் ராஜ், ப்ரியாமணி, கிஷோர், ராவ் ரமேஷ், ராதிகா, நாசர் எனப் பலரும் நடித்துள்ளனர். மார்ச் 6ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ள நிலையில், தற்போது இப்படத்தின் தலைப்பு குறித்த சர்ச்சை ஒரு விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

S Saraswathi
S Saraswathi

சமீபகாலமாக படத்தின் தலைப்புகளில் கடவுள் பெயர்கள் இருந்தால், அப்படத்தின் தலைப்பை மாற்றச் சொல்லி தணிக்கை வாரியம் கூறிவருகிறது. பிப்ரவரி 20ஆம் தேதி சுஹாஸ் நடித்து வெளியான `Hey Balwanth' படத்திற்கு முன்பு வைக்கப்பட்ட பெயர் `Hey Bhagawan'. இந்தப் பெயரை மாற்ற வேண்டும் என தணிக்கை வாரியம் கூற பெயர் மாற்றப்பட்டு வெளியிடப்பட்டது. இதேபோல கடந்த ஆண்டு மலையாளத்தில் அனுபமா பரமேஸ்வரன், சுரேஷ் கோபி நடித்து தயாரான ’Janaki vs State of Kerala’ படத்தின் பெயருக்கும், ’ஜானகி’ என்பது தெய்வம் சீதாவை குறிப்பது என ஆட்சேபிக்கப்பட்டது. மேலும், படத்தில் ’ஜானகி’ என்ற பெயர் கொண்ட கதாநாயகி பாத்திரம், பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானவர். எனவே படத்தில் இரு இடங்களில் ’ஜானகி’ என்ற பெயரை ம்யூட் செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது. கடைசியில் படத்தின் பெயர்  `JSK: Janaki V v/s State of Kerala' என மாற்றப்பட்டது.

Varalaxmi changed her movie name into S Saraswathi after CBFC said
ஆரம்பிக்கலாமா.. துவங்கியது `தலைவர் 173' | Rajinikanth | Thalaivar 173 | Cibi Chakaravarthi

தற்போது வரலட்சுமி சரத்குமார் இயக்கியுள்ள, `சரஸ்வதி' படத்தின் தலைப்புக்கும், ’சரஸ்வதி’ என்பது கடவுளின் பெயர் என தணிக்கை வாரியம் சொல்ல, கடைசியில் படத்தின் பெயரை `எஸ் சரஸ்வதி' என மாற்றிச் சான்றிதழ் பெற்றுள்ளது படக்குழு.

Varalaxmi Sarathkumar
Varalaxmi SarathkumarS Saraswathi

இப்படி ஒவ்வொரு முறையும் பட வெளியீட்டுக்கு மிக நெருக்கமாக படத்தின் தலைப்பு கடவுளின் பெயர் எனச் சொல்லி ஆட்சேபிக்கப்படுவதும், பல நாட்கள் விளம்பரம் செய்யப்பட்ட படத்தின் பெயர் மாற்றப்படுவதும் இந்திய சினிமாவில், குறிப்பாக தென்னிந்திய தொடர்கதையாகி வருகிறது. இதுபற்றி திரைத்துறையினர் தொடர்ச்சியாக எதிர்க்குரல் எழுப்பினாலும், தீர்வு எதுவும் எட்டப்படவில்லை. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com